News October 10, 2025
Cinema Roundup: ரீ-ரிலீசாகும் அஞ்சான்

சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் விரைவில் ரீ-ரிலீசாகும் என அறிவிப்பு. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கவுள்ளார். *ஜி.வி.பிரகாஷின் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. *மகேஷ் பாபுவின் SSMB29 அதிகாரப்பூர்வ டைட்டில் நவ.16-ல் வெளியாகும் என தகவல்.
Similar News
News November 14, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

டெட் தேர்வு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், சில வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்படும். ஆனால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வையொட்டி, புதுச்சேரியிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 14, 2025
VIRAL: ராகுல் காந்தியின் ‘95 தேர்தல் தோல்விகள்’

காங்கிரஸின் தோல்வியை கலாய்த்து பாஜக ஐடி விங் வெளியிட்ட X பதிவு வைரலாகி வருகிறது. காங்கிரஸில் முக்கிய தலைவராக ராகுல் உருவெடுத்த 2005 முதல் 2025 வரையான 20 ஆண்டுகளில், அக்கட்சியின் அனைத்து தேர்தல் தோல்விகள் & பின்னடைவுகளை குறிப்பிட்டு, ‘ராகுல் காந்தி! இன்னொரு தேர்தல், இன்னொரு தோல்வி!’ எனக் குறிப்பிட்டு, தேர்தலில் தோற்பதில் இவரது consistency-ஐ யாருமே மிஞ்ச முடியாது என்று கிண்டல் செய்துள்ளது.
News November 14, 2025
BIHAR ELECTION: தேஜ் பிரதாப் யாதவ் தோல்வி

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தோல்வியடைந்தார். மஹுவா தொகுதியில் தனது ஜன்ஷக்தி ஜனதா தள கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர், LJP(R) வேட்பாளர் சஞ்சய் குமாரிடம் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3-ம் இடம் பிடித்தார். ஆர்ஜேடி கட்சியின் முகேஷ் ரோஷன் இரண்டாம் இடம் பிடித்தார்.


