News August 6, 2024
வங்கதேச கலவர பலி 135ஆக உயர்வு

வங்கதேசத்தில் நேற்று நிகழ்ந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 135ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் நேற்று ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 4, 2026
காஞ்சிபுரம்: இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 9498794987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) & இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!
News April 4, 2026
4 பேர் போதையில்… ஷகீலா என்ன செய்தார் தெரியுமா?

நடிப்பில் மட்டுமல்ல, செயலிலும் நடிகை ஷகீலா ரொம்பவே போல்டு தான். மலையாளப் பட ஷூட்டிங்கின் போது, முன்பு ஒருமுறை அவர் தங்கியிருந்த ரூமுக்கு எதிரே பயங்கர சத்தம் கேட்டுள்ளது. வெளியில் சென்று பார்த்தால், 4 பேர் போதையில் நடிகை ரூபா இருந்த ரூமில் அசிங்கமாக பேசி கலாட்டா செய்துள்ளனர். இதை ஷகீலா தட்டிக்கேட்க ஒருவன் அவரை அடித்துவிட்டான். சற்றும் தயங்காத ஷகீலா அவனை திருப்பியடிக்க பெரும் பிரச்னையாகிவிட்டதாம்.
News April 4, 2026
அரசியலும் வரலாறும் சுந்தர்.சி விரல் நுனியில் உள்ளது: குஷ்பு

சுந்தர்.சி வேட்பாளராக களமிறங்குவது தனக்கு சந்தோசமாக உள்ளது என குஷ்பு தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், சுந்தர்.சியை அரசியலுக்கு புதியவர் என சொல்கிறார்கள். ஆனால் அவர் களத்தில் இறங்கிய பின், அரசியலும் வரலாறும் அவரின் விரல் நுனியில் உள்ளது என்பதை புரிந்துகொள்வார்கள் என்றார். அரசியலுக்கு விஜய் புதியவர் என்பதால், களத்தில் அதிமுகவும், திமுகவும் உள்ளதாகவே தான் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.


