News August 28, 2025
வாக்குச் சீட்டு முறைதான் ஒரே தீர்வு: சீமான் திட்டவட்டம்

வாக்கு சீட்டு முறை வந்தால்தான் நேர்மையாக வாக்குப்பதிவு நடக்க வாய்ப்புள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரத்தை ஊழலில் பெருத்த நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார். பாஜக ஆட்சியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் சொல்லும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றது என சொல்லமுடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News August 28, 2025
கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு

திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க இன்னும் வாய்ப்பு இருப்பதாக EX அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். வலிமையான திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விஜய்க்கு அழைப்பு விடுத்த அவர், அதிமுக வாக்குகள் தவெகவுக்கு செல்லாது எனவும் தெரிவித்தார். மேலும், கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் மற்ற கட்சிகளை விமர்சிக்க விஜய்க்கு உரிமை இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
News August 28, 2025
நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்

மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். இந்தக் கழிவுகளை நீக்கி, பலப்படுத்தும் ஆற்றல் சிவப்பு மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். சிவப்பு மந்தாரை இலை & பூக்கள் (1-2), சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மந்தாரை டீ ரெடி. இந்த டீயை காலையில் குடிக்கலாம். SHARE IT.
News August 28, 2025
இன்னைக்கு என்ன தினம் தெரியுமா?

நீங்கள் சிறுவயதில் பல கார்ட்டூன்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதில் பவர் ரேஞ்சர்ஸ் தொடருக்கென தனி இடம் உங்கள் மனதில் இருக்கும். அப்படி பட்ட ஒரு கிளாசிக் தொடரை கொண்டாடவே இன்று பவர் ரேஞ்சர்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆக.28, 1993-ல் தான் ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’ தொடர் முதன்முதலில் USA-வில் ஒளிபரப்பப்பட்டது. உங்களுக்கு எந்த கலர் Power Ranger பிடிக்கும்? கமண்ட்ல சொல்லுங்க..