News April 29, 2025
பஜாஜின் புது EV ஸ்கூட்டர்.. என்னென்ன அம்சங்கள்?

புதிய சேட்டாக் 3503 EV ஸ்கூட்டர் வேரியன்டை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற 35 சீரிஸின் விலையைக் காட்டிலும் சற்று குறைவாக, ₹1.10 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல், குறைவான வசதிகளையே கொண்டுள்ளது. மணிக்கு 63 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும். மற்ற 3501, 3502 வேரியன்ட்களை காட்டிலும், 0 – 80% வரை சார்ஜ் ஏற 3.25 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
Similar News
News July 11, 2025
கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
News July 11, 2025
குன்றக்குடி அடிகளாருக்கு CM ஸ்டாலின் புகழாரம்

திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்று குன்றக்குடி அடிகளாரை CM ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி SM-ல் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் என்றும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்றும் புகழ்ந்துள்ளார்.
News July 11, 2025
சிறுநீரை ரொம்ப நேரம் அடக்குகிறீர்களா?

சிறுநீர் கழிப்பது இயற்கையின் அழைப்பு. ஆனால், பலரும் சோம்பலின் காரணமாகவோ, பிஸியாக இருப்பதாலோ சிறுநீர் கழிப்பதை தள்ளிப் போடுகின்றனர். இதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் சிறுநீரை அடக்குவதால் இடுப்பு தசைகள் பாதித்து, குழந்தையின்மை பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போதே, உங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்துவிடுங்கள்.