News April 29, 2025
பஜாஜின் புது EV ஸ்கூட்டர்.. என்னென்ன அம்சங்கள்?

புதிய சேட்டாக் 3503 EV ஸ்கூட்டர் வேரியன்டை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மற்ற 35 சீரிஸின் விலையைக் காட்டிலும் சற்று குறைவாக, ₹1.10 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல், குறைவான வசதிகளையே கொண்டுள்ளது. மணிக்கு 63 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும். மற்ற 3501, 3502 வேரியன்ட்களை காட்டிலும், 0 – 80% வரை சார்ஜ் ஏற 3.25 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
Similar News
News December 4, 2025
நெல்லை: டிகிரி போதும்., ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

நெல்லை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <
News December 4, 2025
தமிழக தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள்.
News December 4, 2025
தமிழ்நாட்டில் Financial Pollution: MP வில்சன்

TN-க்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு ‘நிதி மாசுபாட்டை’ உருவாக்கியுள்ளதாக பார்லி.,யில் MP வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை பட்டியலிட்ட அவர், ஜல் ஜீவன் திட்டத்தில் ₹3,112 கோடி, நெல் கொள்முதல் & மானியங்களுக்காக ₹2,670 கோடி, சமக்ர சிக்ஷாவுக்கு ₹3,548 கோடி இன்னும் வராமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான நீதியை உறுதி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


