News May 23, 2024
ரேஷன் கடைகளுக்கு வந்த தரமற்ற துவரம் பருப்பு

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 90 டன் தரமற்ற துவரம் பருப்புகள் அனுப்பப்பட்டது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கிய அந்த பருப்புகளை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்த அவர்கள், பொருட்களின் தரத்தை ஆய்வு செய்த பிறகே மக்களுக்கு விநியோகிப்போம் எனக் கூறினர். தரமில்லாப் பொருட்களை அனுப்புவது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தனர்.
Similar News
News August 18, 2025
CPR ஜனாதிபதியாகக் கூட வரலாம்: வைகோ

அரசியலைத் தாண்டி நண்பர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் CP ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக வைகோ கூறியுள்ளார். கொங்கு பகுதியின் பிரதிநிதியாக அறியப்படும் அவர், ஜனாதிபதியாகக் கூட உயரலாம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் INDIA கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக என்ன முடிவெடுக்கிறதோ, அதை மதிமுக ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News August 18, 2025
துரைமுருகனிடம் நலம் விசாரித்த CM ஸ்டாலின்

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் எ.வ.வேலு உடனிருந்தார். கையில் கட்டுடன் துரைமுருகன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. முழுமையான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஜூனில் காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
News August 18, 2025
INDIA கூட்டணியிடம் ஆதரவு கேட்கும் NDA?

NDA கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடக்கவுள்ளது. இதனிடையே, மல்லிகார்ஜுன கார்கேவை தொலைபேசியில் தொடர்புகொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணி வேட்பாளருக்கு INDIA கூட்டணி ஆதரவு அளிக்குமா?