News May 31, 2024
பறவைக் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு உத்தரவு

கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை, மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, ஜார்க்கண்டில் பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், தடுப்பு மருந்துகள், PPE கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 19, 2025
தஞ்சை மக்களே இன்று நீங்கள் ரெடியா?

தஞ்சை மக்களே உங்கள் ஊருக்கே வந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், 19.09.2025 முகாம் நடைபெறும் இடங்கள் இதுதான்!
1.கும்பகோணம்
பாலாஜி மஹால், பச்சையப்பன் தெரு,
2.திருவையாறு
கிரேஸி மஹால், ராயம்பேட்டை
3.சேதுபவாசத்ரம்
சிவமணி விழா அரங்கம், புலிக்காடு
4.அம்மாபேட்டை
ஸ்ரீ விஷ்ணு மஹால், ஆலங்குடி
5.கும்பகோணம், அசூர்
TS மஹால், அசூர்
6.புதுப்பட்டினம்
சைலஜா திருமண மஹால்,
SHARE IT
News September 19, 2025
ரோபோ சங்கர் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு: இபிஎஸ்

நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான <<17754481>>ரோபோ சங்கரின் மறைவு<<>> அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறு, சிறு விழா மேடைகளில் தொடங்கி, TV, சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் முன்னேறியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். அதிமுகவின் பல மேடைகளில் சிறப்பாக செயல்பட்ட அவரது இழப்பு கட்சிக்கும், சினிமா துறையினருக்கும் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 19, 2025
வரலாறு காணாத குறைவு.. மிகப்பெரிய தாக்கம்

USA டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 29 காசுகள் சரிந்து ₹88.13 ஆனது. USA பெடரல் வங்கி 0.25 புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதோடு இந்தாண்டின் பிற்பகுதியில் மேலும் குறையும் என கூறியுள்ளது. மேலும், இந்தியா மீதான USA வரிவிதிப்பு, உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.