News September 4, 2025
நன்மைகளை வாரி வழங்கும் ஆவாரம் பூ தேநீர்!

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆவாரம்பூ தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில், தண்ணீர் கொதி வந்ததும் அதில் இஞ்சி, ஆவாரம் பொடி கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி குடித்தால் உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும். SHARE IT.
Similar News
News September 5, 2025
இந்தியர்களை வம்பிழுத்த USA நிர்வாகி.. இந்தியா சாடல்

மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெயால் பிராமணர்களே பலனடைவதாக டிரம்பின் பொருளாதார ஆலோசகர் நவரோ தெரிவித்த கருத்தை, இந்தியா நிராகரித்துள்ளது. இது பொய்யான தகவல் எனவும், மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் சாடியுள்ளது. மேலும், USA உடனான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, நவரோவின் கருத்துக்கு பாஜகவும், காங்கிரசும் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தன.
News September 5, 2025
BREAKING: பூவை செங்குட்டுவன் காலமானார்

ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்(90) காலமானார். வயது மூப்பால் சென்னை பெரம்பூரில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஏராளமான ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார். ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை’, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ உள்ளிட்ட பாடல்கள் முக்கியமானவை. RIP
News September 5, 2025
EVM-க்கு பதில் வாக்குச்சீட்டில் தேர்தல்.. கர்நாடகாவில் ட்விஸ்ட்

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் EVM-க்கு பதிலாக வாக்குச்சீட்டை பயன்படுத்த கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட திருத்தம் செய்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு சிபாரிசு செய்யப்பட உள்ளது. வாக்கு திருட்டு, பாஜகவிற்கு ஆதரவாக ECI செயல்படுவதாக ராகுல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கர்நாடகா Cong அரசு இம்முடிவை எடுத்துள்ளது. ஆனால், தோல்வி பயத்தில் இப்படி செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.