News September 4, 2025
நன்மைகளை வாரி வழங்கும் ஆவாரம் பூ தேநீர்!

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆவாரம்பூ தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில், தண்ணீர் கொதி வந்ததும் அதில் இஞ்சி, ஆவாரம் பொடி கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி குடித்தால் உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும். SHARE IT.
Similar News
News November 7, 2025
அதிமுக + விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை RB உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தவெகவும் CM வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை EPS அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் RB உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் மெகா கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
News November 7, 2025
அதுல்யா அணிந்தால் இலைகளும் மலரும்..!

‘காதல் கண் கட்டுதே’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யா ரவி, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். SM-யில் மிகவும் ஆக்டிவாக இருப்பதன் மூலம், அதுல்யாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் சமீபத்தில், இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில், இலைகளை போர்த்திய பச்சை வண்ணமாய் மின்னுகிறார். உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா, லைக் போடுங்க.
News November 7, 2025
BREAKING: கேரளாவுக்கு ஆம்னி பஸ்கள் செல்லாது

கேரளாவிற்கு இன்று சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அம்மாநில போலீசார் சிறைபிடித்தனர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட பஸ்களுக்கு ₹70 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை கண்டித்து இன்று இரவு முதல் கேரளாவிற்கு ஆம்னி பஸ்களை இயக்குவதில்லை என்ற முடிவை பஸ் உரிமையாளர் எடுத்துள்ளனர்.


