India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.37 கோடி ரொக்கம், ரூ.0.36 கோடி மதிப்பில் மதுபானங்கள், ரூ.0.25 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.0.20 கோடி மதிப்பில் இலவச பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வருடாந்திர பட்டியலை நேற்று ஐநா வெளியிட்டது. இதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா 10, இங்கிலாந்து 20, அமெரிக்கா 23, ஜெர்மனி 24, சீனா 64, ரஷ்யா 70 ஆகிய இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை (126) முந்தி பாகிஸ்தான் 108ஆவது இடத்தில் உள்ளது.
திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார். இதில் மூத்த நிர்வாகிகள் பலர் மீண்டும் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல் மூலம் அறியப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 10க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பல வாரிசுகளின் பெயர்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கேம் சேஞ்சர்’. இடையில் சில மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவலின்படி இப்படத்தில் மூன்று நடிகர்கள் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி SJ சூர்யா, தெலுங்கு நடிகர்களான ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா ஆகியோரும் வில்லன்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுடன் பாஜக இன்று தொகுதி உடன்பாடு மேற்கொள்கிறது. தமிழகத்தில் ஏறக்குறைய கூட்டணியை பாஜக நிறைவு செய்ததாக தெரிகிறது. பாமக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, தமமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்று உடன்பாடு எட்டப்படும் என கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர். இதையடுத்து, முழுமையாக தயாரான தேர்தல் அறிக்கை கனிமொழி தலைமையில் இன்று வெளியிடப்படுகிறது.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் எனப் பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்க லகந்த பானகத்தை (சீரகம், கருப்பட்டி கலந்த நீர்) கோயிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு படைத்து, சக பக்தர்களுக்கு கொடுக்க திருஷ்டி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
தமிழக அரசில் 2,553 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: MBBS. வயது வரம்பு: 22-37. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹56,100-₹1,77,500/-. கூடுதல் தகவல்களுக்கு <
தமிழகத்தில் மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் பெறப்படும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி மனுக்களை பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.