India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்த சேவாக்கை கண்டுபிடித்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் சேவாக்கை போல் நிறைய சாதிப்பார் எனவும், அவரது பேட்டிங் திறன், ஆதிக்கம் தனக்கு அதையே நியாபகப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜெய்ஸ்வால் களத்தில் இருப்பது எதிரணியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற வாட்ச் பிராண்டான ரோலக்ஸின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டார்ஃப், ஒரு நாஜி உளவாளி என பிரிட்டிஷ் உளவுத்துறை வகைப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் குடிமகனாக அவர் இருந்தாலும், ஹிட்லர் மீது அதீத பற்று கொண்டவர் என 2-ம் உலகப்போர் காலகட்ட பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரிக்க வரலாற்று ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை தற்போது ரோலக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 423 ▶குறள்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்ததும், இரு அணி வீரர்கள் அணிந்த ஜெர்ஸி, தொப்பிகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. இதில் இந்திய அணியின் கேட்பன் சுப்மன் கில்லின் ஜெர்ஸி அதிகபட்சமாக ₹5.6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. மொத்தமாக இந்திய அணியின் ஜெர்ஸிகள் ₹33.9 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டன. இந்த பணம் ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை மூலம் பொது சேவைக்கு வழங்கப்பட உள்ளன.
இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ₹127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலங்களில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது.
இந்தியா – ஓமன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இரு நாடுகளும் தங்களது சுங்கவரிகளை குறைக்கும் அல்லது நீக்கும். 2024-25 ஆண்டில் 10 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இரு தரப்பு வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள், யூரியா 70% ஓமனில் இருந்து வருபவை.
▶ஆகஸ்ட் 10 – ஆடி 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
ஆபரேஷன் சிந்தூரில் பாக்.,-ன் 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக IAF தளபதி அமர் பிரீத் சிங் கூறியிருந்தார். ஆனால், இதை பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுத்துள்ளார். ஒரு போர் விமானத்தை கூட இந்தியா வீழ்த்தவில்லை எனவும், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் நடுநிலை அமைப்புகள் இதை விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா உண்மையை வெளிக்கொண்டு வர விடாது என்றும் கூறியுள்ளார்.
தோனி, கோலி கொடுத்த அட்வைஸை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நினைவு கூர்ந்துள்ளார். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், பயிற்சி செய்யுங்கள் என கோலி சொன்னதாகவும், பயிற்சி தான் உங்களுக்கு தன்னம்பிக்கையை தரும் என தோனி சொன்னதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையின் விளையாட்டு, அதில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நம்பிக்கை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-25-ம் ஆண்டில் ₹1.50 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.27 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 18% அதிகரித்துள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்கள் 77%, தனியார் நிறுவனங்கள் 23% பங்களிப்பை செய்துள்ளன.
Sorry, no posts matched your criteria.