News August 10, 2025
ரோலக்ஸ் நிறுவனர் ஒரு நாஜி உளவாளி?

புகழ்பெற்ற வாட்ச் பிராண்டான ரோலக்ஸின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டார்ஃப், ஒரு நாஜி உளவாளி என பிரிட்டிஷ் உளவுத்துறை வகைப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் குடிமகனாக அவர் இருந்தாலும், ஹிட்லர் மீது அதீத பற்று கொண்டவர் என 2-ம் உலகப்போர் காலகட்ட பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரிக்க வரலாற்று ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை தற்போது ரோலக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது.
Similar News
News November 9, 2025
ஆட்டத்தை தொடங்கிய அடுத்த அதிமுக தலைவர்!

10 படங்கள் நன்றாக ஓடினாலே CM ஆகலாம் என்ற மாயையில் யார் யாரோ புதிதாக கிளம்பியுள்ளனர் என நடிகர் விஜய்யை நத்தம் விஸ்வநாதன் மறைமுகமாக சாடியுள்ளார். புதிதாக கட்சி தொடங்கியவுடன் நான்தான் CM எனக் கூறுவதைப் பற்றி மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக Ex அமைச்சர் <<18226778>>KP முனுசாமியும்<<>>, சினிமா மாயையில் சிலர் கிளம்பியுள்ளதாக விஜய்யை விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
News November 9, 2025
வாவ்.. எப்பேர்ப்பட்ட சிந்தனை!

இந்த போட்டோக்களை சட்டென பார்த்தால், ஒரே படம் போல தான் தெரியும். ஆனால், அவை இருவேறு போட்டோக்களாகும். இரண்டு படங்களை கரெக்ட்டாக ஒன்றிணைத்து, உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார், Fontanesi என்ற கலைஞர். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து, அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்கவும். இத நீங்க மட்டும் ரசிக்காம, நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. இவற்றில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எது?
News November 9, 2025
BREAKING: டிஜிட்டல் தங்கம்.. செபி விடுத்த வார்னிங்!

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது சமீபமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இது ஆபத்தானது என்று செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. செபி என்பது இந்தியாவில் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களின் நலனை காக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை என்று கூறியுள்ள செபி, இந்த முதலீடு செபியின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் எச்சரித்துள்ளது.


