News April 8, 2024

ரவுடியை ஏவி விடும் வேலையை தான் பாஜக செய்கிறது

image

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை என சீமான் விமர்சித்துள்ளார். சிபிஐ இருக்கும் பொழுது என்.ஐ.ஏ அமைப்பு விசாரணையில் இறங்குகிறது. ஐ.டி அமைப்பு இருந்தும் ED வழக்குகளை கையாள்கிறது, ஏன் இரண்டுக்கும் மத்திய அரசு செலவு செய்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், முதலில் ஒரு ரவுடியை ஏவி விடுவது, அவன் அடி வாங்கி விட்டு வந்த பிறகு மற்றொரு பெரிய ரவுடி அனுப்பும் வேலையை பாஜக செய்வதாகவும் விமர்சித்தார்.

News April 8, 2024

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

News April 8, 2024

திட்டமிட்டு பொய் செய்தியை பரப்புகிறார்கள்

image

சில அரசியல் கட்சிகளின் தூண்டுதல் காரணமாக தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக இபிஎஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பலமுறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் சேலத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறிய அவர், தேர்தல் நேரத்தில் துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி திட்டமிட்டு திமுக பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.

News April 8, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ ஒருவனை அகந்தை ஆட்கொண்டால், அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.
➤ மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.
➤ நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு; இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
➤ அழுகையை ரசிப்பவர்கள் தான் ஆனந்தமாய் சிரிக்க முடியும்.
➤ வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே.

News April 8, 2024

மகனுக்கு அன்பு கட்டளையிட்ட திண்டுக்கல் சீனிவாசன்

image

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், திண்டுக்கல் சீனிவாசனின் மகன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டரை முன்னிட்டு நடந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒன்றாக கலந்துகொண்டனர். அப்போது தனது மகனை அமைச்சரிடம் அறிமுகப்படுத்திய திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குமாறு மகனிடம் அறிவுறுத்தினார்.

News April 8, 2024

அண்ணாமலைக்கு டெபாசிட் கிடைக்காது

image

ஜோதிமணி அழுதுகொண்டே இருக்க வேண்டியது தான், வெற்றிபெற போவதில்லை என நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். கரூரில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்பதால் அண்ணாமலை கோவைக்கு சென்றுள்ளதாக விமர்சித்த அவர், எங்கே சென்றாலும் அவருக்கு தோல்வி மட்டுமே பரிசாக கிடைக்கும் என்றார். மேலும் பேசிய அவர், தேர்தலுக்கு பிறகு அண்ணாமலையை கர்நாடகத்திற்கே தமிழக மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

News April 8, 2024

வரலாற்றில் இன்று

image

➤1277 – வேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது.
➤1820 – பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.
➤1906 – ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார்.
➤1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
➤ 2000 – அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

News April 8, 2024

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கேப்டன் மாற்றம், 3 போட்டியில் தொடர் தோல்வி, ரோகித்-பாண்டியா ரசிகர்கள் மோதல் என சிக்கலில் தவித்த அந்த அணிக்கு, ஆக்ஸிஜனாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்த வெற்றி தொடர வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு மும்பை அணி முன்னேறியுள்ளது.

News April 8, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
◾விளக்கம்:
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்

News April 8, 2024

அந்த தவற்றை ஒருபோதும் செய்ய மாட்டேன்

image

கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்தால் சினிமாவில் நிலைக்க முடியாது என நடிகை ஸ்மிருதி வெங்கட் தெரிவித்துள்ளார். எவ்வளவு சவாலான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், கமர்ஷியல் படங்களில் வந்து போகும் கதாநாயகியாக நடிக்க முடியாது, அதில் திறமையை வெளிப்படுத்த முடியாது என்ற அவர், பொறுமையாக காத்திருந்தாலும் நல்ல கேரக்டரில் நடிப்பதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!