News August 10, 2025

மீண்டும் அப்பாவான டென்னிஸ் லெஜெண்ட்

image

டென்னிஸ் லெஜண்ட் ரஃபேல் நடால் மீண்டும் தந்தையாகியுள்ளார். அவரது மனைவி மரியா ஃபிரான்ஸிஸ்கா பெரெல்லோவிற்கு கடந்த 7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு Miquel என பெயர் வைத்துள்ளனர். இது மரியாவின் காலமான தந்தையின் பெயராகும். அவரது நினைவாக குழந்தைக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற நடாலுக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

News August 10, 2025

ஊழியர்களை பில்லியனர்கள் ஆக்கினேன்: Nvidia CEO

image

தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 42,000 ஊழியர்களின் சம்பளம், Comp. Off என அனைத்தையும் மதிப்பாய்வு செய்வதாக Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மாதமும் இதற்கென தனியாக நேரம் ஒதுக்குவதாகவும், வேறு எந்த நிறுவனத்தை விடவும் தனது நிர்வாக குழு ஊழியர்களை அதிகளவில் பில்லியனர்கள் ஆக்கியது நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

News August 10, 2025

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

image

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி, இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.

News August 10, 2025

அடுத்த சேவாக் இவர் தான்: கிளார்க்

image

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்த சேவாக்கை கண்டுபிடித்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் சேவாக்கை போல் நிறைய சாதிப்பார் எனவும், அவரது பேட்டிங் திறன், ஆதிக்கம் தனக்கு அதையே நியாபகப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜெய்ஸ்வால் களத்தில் இருப்பது எதிரணியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

ரோலக்ஸ் நிறுவனர் ஒரு நாஜி உளவாளி?

image

புகழ்பெற்ற வாட்ச் பிராண்டான ரோலக்ஸின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டார்ஃப், ஒரு நாஜி உளவாளி என பிரிட்டிஷ் உளவுத்துறை வகைப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் குடிமகனாக அவர் இருந்தாலும், ஹிட்லர் மீது அதீத பற்று கொண்டவர் என 2-ம் உலகப்போர் காலகட்ட பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரிக்க வரலாற்று ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை தற்போது ரோலக்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது.

News August 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 423 ▶குறள்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

News August 10, 2025

₹5 லட்சத்திற்கு ஏலம் போன கில்லின் ஜெர்ஸி

image

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்ததும், இரு அணி வீரர்கள் அணிந்த ஜெர்ஸி, தொப்பிகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. இதில் இந்திய அணியின் கேட்பன் சுப்மன் கில்லின் ஜெர்ஸி அதிகபட்சமாக ₹5.6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. மொத்தமாக இந்திய அணியின் ஜெர்ஸிகள் ₹33.9 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டன. இந்த பணம் ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை மூலம் பொது சேவைக்கு வழங்கப்பட உள்ளன.

News August 10, 2025

இந்தியாவிற்கு வான்வெளியை மூடியதால் ₹127 கோடி இழப்பு

image

இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ₹127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலங்களில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது.

News August 10, 2025

விரைவில் இந்தியா – ஓமன் இடையே ஒப்பந்தம்

image

இந்தியா – ஓமன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இரு நாடுகளும் தங்களது சுங்கவரிகளை குறைக்கும் அல்லது நீக்கும். 2024-25 ஆண்டில் 10 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இரு தரப்பு வர்த்தகம் நடந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள், யூரியா 70% ஓமனில் இருந்து வருபவை.

News August 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 10 – ஆடி 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

error: Content is protected !!