India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு 11.01 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில், பூமியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. பின், ராஜஸ்தானில் நள்ளிரவு 1.29 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
பெங்களூரு-ராஜஸ்தான் இடையேயான 19ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் நடைபெற உள்ளது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள RCB அணி, வெற்றிப் பாதைக்கு திரும்புமா? புள்ளிப் பட்டியலில் முன்னேறுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தோல்வியே காணாத ராஜஸ்தான் உடன் மோதவுள்ளதால், போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும். புள்ளிப் பட்டியலில், ராஜஸ்தான்-2, பெங்களூரு-8ஆவது இடங்களில் உள்ளன.
▶ஆளுநர் அல்லது மத்திய அமைச்சர் ஆகும் திட்டம் எனக்கு இல்லை: ஓபிஎஸ்
▶ஒரே நாளில் 44.08 கோடி யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு நுகர்ந்துள்ளது
▶அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
▶தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
▶தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது: பிரேமலதா
▶ஐபில்: சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி
தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது மிகவும் கண்டிக்கதக்கது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகா அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால், கொடுக்க மனது தான் இல்லை. 2 மாநிலத்திற்கும் தண்ணீர் தேவைதான். அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருமண வாழ்க்கையில் நியாயமாக இருக்க முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு 25 வயது இருக்கும் போது ‘ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர்’ நோய் இருப்பது எனக்கு தெரிய வந்தது. இதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை. மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது, எனக்கும் அப்படி இருக்க தோன்றும்” என்றார்.
▶ஏப்ரல் – 6, பங்குனி – 24 ▶கிழமை – சனி
▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 9:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM
▶குளிகை நேரம்: 6:00 AM – 7:30 AM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶திதி: த்ரயோதசி
▶நட்சத்திரம்: 3:39 PM வரை சதயம் பிறகு பூரட்டாதி
சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் வீரர் அபிஷேக் அதிரடி காட்டியுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், பவர் பிளே ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக, முகேஷ் சௌத்ரி வீசிய 2ஆவது ஓவரில் 4, 0, 6, 0, 6NB, 6, 4 என விளாசி மொத்தமாக 27 ரன்கள் குவித்து, ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தார். 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அதனால் நான் சாக போகிறேன். இது என்னோட முடிவு தான். என்னை யாரும் தேட வேண்டாம்” என்று கூறியிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
மக்களவைத் தோ்தலில் பெண்களுக்கு தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “மக்கள்தொகை 30 கோடியாக இருக்கும் போது 543 மக்களவைத் தொகுதிகள் இருந்தன. தற்போது 130 கோடியை தொட்ட பின்பும், அதே 543 தொகுதிகள்தான் உள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு தனித்தொகுதி இருப்பது போன்று பெண்களுக்கும் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.
✍உன் அடிமை என்று என்னை நினைக்கும் போது, உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை. ✍ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடைவதற்காக உழைத்து முன்னேறுங்கள். ✍கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது. ✍மகாத்மாக்கள் வந்தார்கள், மறைந்தார்கள். ஆனால், தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ✍கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து.
Sorry, no posts matched your criteria.