India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மார்ச் – 30 | பங்குனி – 17
▶கிழமை: சனி ▶திதி: பஞ்சமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 09:30 – 10:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 09:00 – 10:30 வரை
▶எமகண்டம்: காலை 01:30 – 03:00 வரை
▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி
ஆப்கனில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லடி, கசையடி அளிக்கும் தண்டனையை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தலிபான் முல்லா ஹிபத்துல்லா, “காபூலைக் கைப்பற்றியதோடு தலிபான்களின் வேலை முடிந்துவிடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது. ஷாரியத் சட்டத்தை விரைவில் அமல்படுத்தப் போகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்தி திரை உலகில் நிலவும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும் என்று நடிகை பிரியாமணி வலியுறுத்தியுள்ளார். பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்த அவர், “எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. விரைவில் அங்கு நிலவும் ஏற்றத்தாழ்வு மாறும் என நம்புகிறேன். நாங்களும் இந்திய நடிகர்கள் தான்” என்றார்.
மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி குடிநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கும் முன்பாக பித்தளை பாத்திரத்தில், ஒரு கைப்பிடி நெல்லியை (வெட்டியது) போட்டு நீரை ஊற்றி மூடி வைக்கவும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம். இரும்புச் சத்து குறைப்பாடு உடையவர்களும் இதை அருந்தலாம்.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில், அல்-கம்பார் கப்பலை ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் இடைமறித்தது. அப்போது, கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய இந்திய படை,12 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு 23 பேரையும் மீட்டதாகக் கூறப்படுகிறது.
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள இயக்குநர் தங்கர் பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரைச் செய்ய இயக்குநர் சேரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களை அழைத்துவர சிலர் முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியை காரணம் காட்டி, ஆளும் தரப்புக்கு எதிராகக் களத்துக்கு வர அவர்கள் மறுத்துவிட்டனராம்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது தியாகமல்ல; தமிழகம் காக்கும் வியூகம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், “கவர்னரை அனுப்பி திமுக ஆட்சிக்கு மத்தியில் இருப்பவர்கள் தொல்லை தருகிறார்கள். வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால், 29 காசு மட்டும் தந்து, நம் அடிவயிற்றில் கை வைக்கின்றனர். நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும்” என்றார்.
*1976 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் நில அபகரிப்பு திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீன நில நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.*1699 – கால்சா அமைப்பை குரு கோவிந்த் சிங் தோற்றுவித்தார். *1853 – ஓவியர் வின்சென்ட் வான் கோ பிறந்த நாள். *1949 – நேட்டோவில் ஐஸ்லாந்து இணைந்தது. *1972 – வடக்கு வியட்நாம் படைகளுக்கும் தெற்கு வியட்நாம் படைகளுக்கும் இடையே போர் மூண்டது. *2017 – ஆய்வாளர் என்.எம்.நம்பூதிரி மறைந்த நாள்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் KKR அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில், RCB அணி அரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது, IPL வரலாற்றில் 1,500 சிக்ஸர்களை கடந்த 2ஆவது அணி என்ற பெருமையை RCB பெற்றது. இந்த பட்டியலில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி (1,548) மட்டுமே உள்ளது. இந்தப் போட்டியில் கோலியுடன் இணைந்து கிரீன் தலா நான்கு சிக்ஸர்களை அடித்து இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி நிறுவனம், தனது முதல் மின்சார வாகனமான SU7 காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்த முதல் 30 நிமிடங்களுக்குள் 50,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை ஷாவ்மி SU7 கார் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தொலைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட பிற சாதனங்களை இணைப்பதற்கான வசதி கொண்ட இந்த காரின் விலை ரூ.24.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.