News March 30, 2024
இன்றைய நல்ல நேரம்!

▶மார்ச் – 30 | பங்குனி – 17
▶கிழமை: சனி ▶திதி: பஞ்சமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 09:30 – 10:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 09:00 – 10:30 வரை
▶எமகண்டம்: காலை 01:30 – 03:00 வரை
▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி
Similar News
News January 13, 2026
தனுஷ் படத்தில் நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்

‘மரியான்’ ஷூட்டிங் போது நடந்த அசௌகரியம் குறித்து நடிகை பார்வதி மனம் திறந்துள்ளார். ஒரு காதல் காட்சியில், தண்ணீரில் முழுவதுமாக நனைந்தபடி நடித்தேன். அப்போது மாற்றுவதற்கு கூட உடைகள் இல்லாததால், எனது அறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். அதற்கு அனுமதிக்காததால், எனக்கு ‘பீரியட்’ என்று கத்தினேன். அங்கு 2 பெண்கள் மட்டுமே இருந்ததால், எனது வலி புரிந்து கொள்ளப்படவில்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 579 ▶குறள்: ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. ▶பொருள்: அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.
News January 13, 2026
மீண்டும் பரவும் நிபா வைரஸ்.. பதற்றம்

மேற்கு வங்கத்தில் 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டதால் அங்கு சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. நிபா, அதிக இறப்பு விகிதங்களை கொண்ட ஆபத்தான வைரஸ் என்பதால் தேசிய அளவிலான சிறப்பு மருத்துவ குழுவும் அம்மாநிலத்திற்கு விரைந்துள்ளது. மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவும் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


