India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் (திங்கள்கிழமை தோறும்) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது. தனிநபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். அத்துடன் விவசாயிகள், மீனவர் கோரிக்கை தினக் கூட்டங்கள் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மக்களவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர்கள் இன்று டெல்லியில் வெளியிட்டனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். சந்தேகப்படும்படியான வாகனங்கள், இடங்களில் சோதனை நடத்த அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மொத்தம் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதினை நிரம்பப் பெற்றவர்களாக உள்ளனர். 100 வயதைக் கடந்தவர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது நிரம்பியிருந்தால் அவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படவுள்ளன. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள், 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி பேரும், பெண்கள் வாக்காளர்கள் 3.15 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேரும் வாக்களிக்க உள்ளனர். 22 -29 வயதுடைய வாக்காளர்கள் 1.08 கோடி பேர். குறிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities, Denotified Tribes என 2 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. அவற்றை பெறுவதில் நடைமுறையில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டதை ஆய்வு செய்து, ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 48,044 பேர். மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள் 2.63 கோடி.
தமிழகத்தில் மக்களவை & சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை ECI வெளியிட்டுள்ளது. அதிமுக(1), மநீம(2) ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 27 பேரின் பெயர்கள் இதில் இடம்பிடித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத இவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
தமிழிலில் ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படத்தை இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கவுள்ளார். கேங் ஆப் வாசிப்பூர் உள்பட இந்தியில் பல படங்களை எடுத்துள்ள அவர், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும், விஜய்யின் லியோ படத்தில் சிறிய பாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர், பான் இந்தியா அளவில் ஜி.வி. பிரகாஷை வைத்து படமெடுக்க இருக்கிறார். மே மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாமகவை தங்கள் கூட்டணி பக்கம் இழுக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த சி.வி.சண்முகம், விருப்ப தொகுதிகளை தர தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.