India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ வசூலில் கலக்கி வருகிறது. இப்படம் உலகம் முழுவதிலும் சேர்த்து ரூ.200 கோடியை நெருங்கியதுடன், அதிகம் வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை இவ்வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதியை விட பிரதமர் மோடி அளித்த நிதியே அதிகம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு பல சிறப்பு திட்டங்களை மோடி அறிவித்துள்ளதாக கூறிய அவர், பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, பிரதமரை அமைச்சர் உதயநிதி 28 பைசா என விமர்சனம் செய்திருந்தார்.
டெஸ்டில் பல சாதனைகள் படைத்த அஷ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கௌரவிக்கும் பொருட்டு அவருக்கு தங்க நாணயங்களால் 500 என வடிவமைக்கப்பட்ட சிறப்பு பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. டெஸ்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்திய அஷ்வினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சி, அரக்கோணம், தி.மலை, வேலூர், கடலூர், தருமபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாற்றமும் இருக்கலாம்.
திண்டுக்கல் எம்.பி தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அபார வெற்றி பெறுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சிபிஎம்-க்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கியதாக கூறிய அவர், நாளைக்கு தேர்தல் வைத்தாலும் வெற்றியை பெற்றுத் தருவோம் என்று சூளுரைத்தார். முன்னதாக 2019 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமையன்று, ராகு கால நேரமான காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் கோயிலுக்கு சென்று துர்க்கை அம்மன் முன்பு நல்லெண்ணெய், நெய்யில் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதுபோல வழிபட்டு வந்தால், பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். தீராத துன்பங்களும் விலகும்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதிமுக – தேமுதிக இடையே 2 கட்டமாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்த நிலையில், நேற்றிரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், மாநிலங்களவை பதவி குறித்து தேர்தலுக்கு பின்பு நல்ல முடிவு எடுப்பதாக அதிமுக உறுதியளித்ததாகவும் தெரிகிறது.
பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டி சினிமா பிரபலங்கள் பலரும் பிரார்த்தித்து வருகின்றனர். இந்நிலையில், டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் பாபு, சேஷூவின் சிகிச்சைக்கு ரசிகர்களிடம் பண உதவி கேட்டு உருக்கமாக டிவீட் செய்துள்ளார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பண உதவி அளித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.