India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது என்பதை அவருடைய காதலர் விஜய்வர்மா பகிர்ந்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் 2 பேர் இடையேயான நெருக்கமான காட்சிகள், சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு 2 பேரும் காதலிப்பதாக ஒப்புக் கொண்டனர். இந்நிலையில், வர்மா அளித்துள்ள பேட்டியில், “லஸ்ட் ஸ்டோரிசில் நடிக்கும்போது டேட்டிங் செல்லவில்லை. 20- 25 நாள்கள் கழித்து தான் டேட்டிங் சென்றோம்” என்றார்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில், செந்தில் நாதன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி தொகுதியில் அமமுக, மதிமுக, அதிமுக இடையே போட்டி நிலவுகிறது.
நாதக சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 150 இளைஞர்களை நிறுத்த போவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் சூளுரைத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நேற்றைய தினம் சீமான் அறிவித்தார். அதில், 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் என சரிசமமாக வேட்பாளர்களை களமிறக்கினார். மேலும், அதில் 15 பேர் மருத்துவர்கள் ஆவார்கள். திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் விழுப்புரத்தில் போட்டியிடுகிறார்.
11.ஆரணி- பாக்கியலட்சுமி 12.விழுப்புரம்- இயக்குநர் மு.களஞ்சியம் 13.கள்ளக்குறிச்சி- ஆ.ஜெகதீசன் 14.சேலம்- DR மனோஜ்குமார் 15.நாமக்கல்- க.கனிமொழி 16.ஈரோடு- DR கார்மேகன் 17.திருப்பூர்- சீதாலட்சுமி 18.நீலகிரி- ஆ.ஜெயகுமார் 19.கோவை- ம.கலாமணி ஜெகநாதன் 20.பொள்ளாச்சி- DR சுரேஷ் குமார் 21.திண்டுக்கல் – DR கைலைராஜன் 22. கரூர்- DR கருப்பையா 23.திருச்சி – ராஜேஷ் 24.பெரம்பலூர்- இரா.தேன்மொழி 25. கடலூர்- மணிவாசகன்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சல் புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், MP/MLAக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
2ஆவது குழந்தை பிறக்காததை நினைத்து இந்தி நடிகை ராணி முகர்ஜி வேதனை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 8 வயதில் ஆதிரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி முகர்ஜி அளித்த பேட்டியில், ” தற்போது எனக்கு 46 வயதாகிறது. ஆதலால் இனிமேல் எனக்கு 2வது குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. எனது மகளுடன் விளையாட ஒரு துணையை பெற்றுத் தர முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது. இது வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தும்” என்றார்.
தேனி தொகுதியில் டிடிவி களமிறங்குவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தொகுதியில் 1999இல் ஏற்கெனவே டிடிவி எம்பியாக இருந்தவர். மக்கள் மத்தியிலும் தனிச் செல்வாக்கு மிக்கவரான இவருக்கு, சமூக சார்ந்த ஓட்டும் எளிதாக கிடைக்கும். ஓபிஎஸ்ஸின் செல்வாக்கும் கூடுதல் பலமாக இருக்கிறது. இதனால், இவருக்கும் தங்கதமிழ்செல்வனுக்கும் போட்டி நிலவுகிறது. அதிமுக 3வது இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டனர். 1) திருவள்ளூர்- மு.ஜெகதீஷ் சந்தர் 2) வ.சென்னை- DR அமுதினி 3) தெ.சென்னை- முனைவர் சு.தமிழ்ச்செல்வி 4) ம.சென்னை – முனைவர் கார்த்திகேயன் 5) திருப்பெரும்புதூர் – DR வெ.ரவிச்சந்திரன் 6) காஞ்சிபுரம்- வி.சந்தோஷ்குமார் 7) அரக்கோணம்- அப்சியா நஸ்ரின் 8) வேலூர்- தி.மகேஷ் ஆனந்த் 9) தருமபுரி- DR .அபிநயா 10) தி.மலை – DR ரமேஷ்பாபு
ரேஷன் கார்டுகள் தொலைந்துவிட்டால், ஆன்லைனில் பெறும் வசதியை உணவுத்துறை ஏற்படுத்தியுள்ளது. www.tnpds.gov.in-ல் “பயனாளர் நுழைவு” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, செல்போன் நம்பரை பதிவிட வேண்டும். பின் உங்கள் நம்பருக்கு வரும் ஓடிபி-யை பதிவு செய்து, ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து, Save என்ற ஆப்ஷனை தந்தால் போதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும்.
மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே நாட்டின் அடுத்த பிரதமர் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பாஜகவும், அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. சிறுபான்மை வாக்குகளை பெறவே கூட்டணி இல்லை என அதிமுக பொய் கூறுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். மு.க. ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் ஆவார்” என்றார்.
Sorry, no posts matched your criteria.