India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானவர் தேசிங்கு பெரியசாமி. இவரிடம் ரூ.3 லட்சம் மோடி செய்த புகாரில், அவரது உதவி இயக்குநர் முகமது இக்பால் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தேசிங்கு பெரியசாமி தற்போது கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
தனிநபர் உரிமைகளில் குறுக்கிடும் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சி தேர்தல் அறிக்கையில், “தனிநபர் உரிமைகளில் குறுக்கிடும் சட்டங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்படும். தனி நபர் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். மக்கள் மீண்டும் அமைதியாக கூடவும், சங்கங்கள் அமைக்கவும் மீண்டும் அனுமதிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வோருக்கான ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு டீசல், மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்;
திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டபூர்வமாக உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், “சுவாமிநாதன் குழு பரிந்துரைபடி, வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பது வருடம்தோறும் சட்டம் மூலம் உறுதி செய்யப்படும். விவசாய நிலம், வேளாண் பொருள்களுக்கு காப்பீடு அளிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேசிய சமூக உதவி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கு அளிக்கப்படும் மாதாந்தர பங்களிப்பு ரூ.1,000ஆக உயர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு எளிதில் சட்ட உதவி கிடைக்க வழிவகை, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் பணிகள் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. அரசுப் பணிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணிகள், ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் முறை ரத்து செய்யப்படும். அந்தப் பணி நியமனங்கள் முறைப்படி நடைபெறுவது உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளது.
ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 அறிமுகப்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் கலந்துபேசி புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்றும், கட்சி மாறும் எம்.பி, எம்எல்ஏக்களின் பதவி உடனடியாக பறிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். ரயில் பயணங்களில் முதியோர்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டு வரப்படும் என காங்., அறிவித்துள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதனால், ரெப்போ விகிதம் உயரும்போது வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். 2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, இதுகுறித்து முடிவுகள் எடுக்கும். அதன் அடிப்படையில் வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டியை வங்கிகள் கூட்டவோ, குறைக்கவோ செய்கின்றன.
கல்வி, வேலைவாய்ப்புகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. இடஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பணி இடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.