News April 5, 2024
அரசுப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது ரத்து

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் பணிகள் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. அரசுப் பணிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணிகள், ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் முறை ரத்து செய்யப்படும். அந்தப் பணி நியமனங்கள் முறைப்படி நடைபெறுவது உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளது.
Similar News
News February 7, 2026
TOSS: இந்திய அணி பேட்டிங்

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் கத்துக்குட்டி அணியான USA-ஐ இந்திய அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அபிஷேக், இஷான் கிஷன், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ரிங்கு, அக்ஷர், அர்ஷ்தீப், வருண், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
News February 7, 2026
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்

செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை தொடர்ந்து மற்றொரு அதிமுக மூத்த நிர்வாகி தவெகவில் இணைந்துள்ளார். வட சென்னையை சேர்ந்த அதிமுக Ex MLA வி.எஸ்.பாபு விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், EPS-க்கு ஆளுமை இல்லை என தெரிவித்ததோடு, அதிமுகவின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News February 7, 2026
துரோகம் செய்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி: கனிமொழி

யாரோடு இருந்தால் TN பாதுகாப்பாக இருக்கும் என்பது தெளிவாக தெரிவதால் பெண்களும் இளைஞர்களும் திமுகவை ஆதரிக்கிறார்கள் என கனிமொழி பேசியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது ’வெற்றி நமது, வெற்றி நமது’ என சொல்ல தோன்றுகிறது என்றார். மேலும், TN-க்கு துரோகம் செய்த பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியுள்ளதாக அதிமுகவையும் விமர்சித்துள்ளார்.


