News March 25, 2024

கைகூடாத கூட்டணி பேச்சுவார்த்தை?

image

ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு எட்டப்படாததால் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. அங்கு பாஜகவுக்கு 8 எம்.பிக்களுக்கும், 23 எம்எல்ஏக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

அரசுக்கு ₹15,000 கோடி ஈவுத்தொகை?

image

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், 12 பொதுத்துறை வங்கிகளும் மொத்த லாபமாக ₹98,000 கோடியை ஈட்டியுள்ளன. இதனால், தற்போது அரசுக்கு ரூ.15,000 கோடி ஈவுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. 2021-22ஆம் ஆண்டில் ஈட்டிய ₹66,539 கோடியுடன் ஒப்பிடும் போது, பொதுத்துறை வங்கிகள் 2023ஆம் நிதியாண்டில் ₹1.05 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியது. இதன் மூலம் அரசுக்கு 13,804 கோடி ரூபாய் ஈவுத்தொகை கிடைத்தது.

News March 25, 2024

அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்.. கலக்கத்தில் பாஜக

image

மத்திய அமைச்சரும், காசியாபாத் எம்.பி.யுமான வி.கே.சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கெனவே, கவுதம் கம்பீர், ஜெயந்த் சின்ஹா, பிகாஜி தாகூர், சத்யதேவ் பச்செளரி, ரஞ்சன் பென் என வேட்பாளர்கள் விலகும் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் பாஜக கலக்கமடைந்துள்ளது.

News March 25, 2024

நீலகிரியில் பலம், பலவீனம் யாருக்கு?

image

நீலகிரியின் மலைப்பகுதிகளில் உள்ள படுகர் சமூகம் AIADMK-வை ஆதரிக்கிறது. அதேநேரம் மலை பகுதிகளில் உள்ள பிற சமூகங்கள் மத்தியில் DMK-வின் ஆ.ராசாவுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. வெள்ளாளர், ஒக்கலிகர், அருந்ததியர் சமூகம் பெரும்பான்மையாக தனபால் பின்னால் நிற்பது அதிமுகவுக்கு பலம். இஸ்லாமியர்களின் வாக்குகள் பிளவுப்படும். இது திமுகவுக்கு சற்று பலவீனம். எல்.முருகன் கணிசமான வாக்குகளை வாங்குவார் எனத் தெரிகிறது.

News March 25, 2024

பரப்புரைக்காக நாங்குநேரி செல்லும் முதல்வர்

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் பரப்புரை செய்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கெனவே தஞ்சை, திருவாரூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் பரப்புரை செய்தார். இந்நிலையில், நெல்லை மற்றும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நாங்குநேரியில் பரப்புரையை துவங்குகிறார்.

News March 25, 2024

மண்டி தொகுதியை மீட்டுக் கொடுப்பாரா கங்கனா ரனாவத்?

image

பாஜக சார்பாக இமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் வெற்றிபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2019இல் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக அங்கு வெற்றி பெற்றது. ஆனாலும், 2021இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா சிங் வெற்றிபெற்றார். இடைத்தேர்தலில் வெற்றியை பறிகொடுத்த பாஜக, கங்கனா வழியாக மீண்டும் வெற்றி வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 25, 2024

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட திட்டம்

image

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் மீதான பாஜக அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பில் மார்ச் 31-ல் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாளை (மார்ச் 26) பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.

News March 25, 2024

அதிமுகவுடன் கூட்டணி: தேமுதிகவில் இருந்து விலகல்

image

அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் இராமநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை, பொதுமக்களுக்காகப் பெரிதும் பணிகள் மேற்கொண்டிருக்கும் டாக்டர் இராமநாதன் வருகை, பாஜகவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 25, 2024

இயக்குநர் அவதாரமெடுக்கும் சாய் பல்லவி

image

முன்னணி நடிகை சாய் பல்லவி, திரைப்பட இயக்குநராக அவதாரமெடுக்கிறார். சிவகார்த்திகேயன், நாக சைதயன்யா படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். நிதிஷ் கல்யாண் இயக்கவுள்ள ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து புதிய படத்தை இயக்க போவதாக சாய் பல்லவி அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 25, 2024

திருஷ்டி போக்கும் பல்லி வழிபாடு

image

மனிதர்களோடு உரையாட கந்தர்வர்களை பல்லி உருவத்தில் இறைவன் அனுப்புவதாக கௌரி சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய பல்லியை வணங்குவதற்காகவே செளந்தர்ய கயிலாயம் என்று ஞானநூல்கள் போற்றும் நெல்லையை அடுத்துள்ள முன்னீர்பள்ளம் ஸ்ரீபரிபூரண கிருபேஸ்வரர் கோவில் அம்பாள் கருவறையின் மேல் கூரையில் தனி சந்நிதானம் உள்ளது. இந்தப் பல்லியை தரிசித்தால் திருஷ்டிகள், தீவினைகள் போன்றவை முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!