India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விண்ணில் செலுத்தக்கூடிய ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி, மீண்டும் பயன்படுத்தும் மறுபயன்பாட்டு ராக்கெட் (RLV-LEX02) தொழில்நுட்ப சோதனையில் இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. சித்ரதுர்கா சோதனை தளத்தில், புஷ்பக் RLV-TD-ஐ கொண்டு இன்று 2ஆம் கட்ட சோதனை நடந்தது. சினூக் ஹெலிகாப்டர் மூலம் 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட புஷ்பக் வெற்றிகரமாக தானியங்கி முறையில் தரையிறங்கியிருக்கிறது.
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததோடு, பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அங்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அத்தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். 1. மத்திய சென்னை – பார்த்தசாரதி 2. விருதுநகர் – விஜய பிரபாகரன் 3. திருவள்ளூர் (தனி) – நல்லதம்பி 4. தஞ்சை – சிவநேசன் 5. கடலூர் – சிவக்கொழுந்து ஆகியோர் தேமுதிக சார்பில் முரசு சின்னத்தில்
நேரடியாக போட்டியிட உள்ளனர்.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை, 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதில், வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கெஜ்ரிவால் தரப்பில் வாதாடி வருகிறார்.
தான் நடிக்கும் புதிய பட போஸ்டரை பிரபு தேவா வெளியிட்டிருக்கிறார். ஜென்டில்மேன் படத்தின் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில் பாடல் மூலம் திரையில் முதலில் பிரபுதேவா தோன்றினார். இதையடுத்து காதலன் படத்தில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். பின்னர் இயக்குநராகவும் அவதாரமெடுத்தார். இந்நிலையில் புதிய பட போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார். அந்த படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றத்தில் இருந்து கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுள்ளார். இம்மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை தலைமை நீதிபதி அமைத்திருந்தார். ஆனால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் கைது தொடர்பாக உள்ள மனு மீதான விசாரணையை கருத்தில் கொண்டு, திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக கெஜ்ரிவால் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
பதவியிலிருக்கும்போதே முதல்வரை கைது செய்ய அதிகாரமுள்ளதா என்பது விவாதப் பொருளாகியுள்ளது. லாலு பிரசாத், ஜெயலலிதா, ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபிறகே கைது செய்யப்பட்டனர். ஆனால் கெஜ்ரிவாலோ பதவியில் இருக்கும்போதே கைதாகியுள்ளார். முதல்வருக்கு பல்வேறு தனி உரிமைகள் உள்ள நிலையில், அதை மீறி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 14 பேர் கொண்ட பட்டியலில் விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி – ஜான் பாண்டியன், சிவகங்கை – தேவநாதன், நாகை – ரமேஷ், தஞ்சை – முருகானந்தம் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதோடு, தமிழகத்தில் 23 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி வடசென்னை – பால் கனகராஜ், திருவள்ளூர் – பால கணபதி, திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி.ராமலிங்கம், திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி – வசந்தராஜன், கரூர் – செந்தில் நாதன், சிதம்பரம் – கார்த்தியாயினி, மதுரை – ராம சீனிவாசன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சென்னையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.