India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோலி 100% முயற்சி செய்தும் RCB வெற்றி பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விராட் மட்டுமே பேட்டிங் சுமையை தோளில் சுமப்பதாகவும், யாரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றனர். நடப்பு IPL-இல், கோலி 146 ஸ்ட்ரைக் ரேட்டில் 316 ரன்கள் எடுத்துள்ளார், மற்ற அனைத்து RCB வீரர்களும் இணைந்து 496 ரன்களே எடுத்துள்ளனர். இதனால் கோலி RCB-யை விட்டு வெளியேற ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
கச்சத்தீவு விவகாரத்தில், ‘பாஜக என்ன செய்தது’ எனக் கேட்கும் தகுதியும் அருகதையும் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு இல்லை என்று அக்கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால், ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீனவர்களைக் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருவதையும் யாரும் மறுக்க முடியாது” எனக் கூறினார்.
அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பாஜக சதி செய்து வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஆங்கிலேய ஆட்சியில் நிலவிய அடிமைத்தனம் எனும் இருட்டில் இருந்து நமது மூதாதையர்கள் சுதந்திரத்தை பெற்று தந்ததாகவும், அதேபோல் மத்திய பாஜக அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக போராட மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
சென்னை, நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லையில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் மின் இணைப்பே 78 வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் என RR அணி அறிவித்திருந்தது. RCB அணிக்கு எதிரான லீக் போட்டியில் RR அணி மொத்தம் 13 சிக்ஸர்களை அடித்தது. அதன்படி, ஒரு சிக்ஸருக்கு 6 சோலார் பேனல் வீதம் 78 சோலார் பேனல் தகடுகள் மூலம் ராஜஸ்தானில் மின் இணைப்பே இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளது. RR அணியின் இந்த செயலை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) 1 கிலோ விலை ₹134க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் ₹130க்கு விற்பனையான நிலையில் 1 வாரத்தில் விலை ₹4 அதிகரித்துள்ளது. மொத்த விலை உயர்ந்துள்ளதையடுத்து சில்லறை விற்பனையில் பல இடங்களில் 1 கிலோ ₹260க்கும் மேல் விற்பனையாகிறது. முட்டை கொள்முதல் விலை ₹4.15 ஆக தொடர்கிறது.
தாரை உருக்கி குடிப்பதற்கும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை பருகுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சீன மருத்துவ அறிவியல் அகாடமி கூறுகிறது. உடலுக்கு தற்காலிக புத்துணர்ச்சியை தரும் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம், பிரக்டோஸ், சல்போனேட்டட் வேதிப் பொருள்கள் கணைய செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே குளிர்பான உயிர்க்கொல்லிகளை தவிருங்கள்.
மக்களவைத் தேர்தலில் பிஹாரில் காங். கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று பாஜக தெரிவித்துள்ளது. பிஹாரில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்யவுள்ளது குறித்து பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் ஷா நவாஸ் ஹூசேன், பிஹாருக்கு மோடி வருவதால், காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு 40 தொகுதிகளையும் பிஹார் மக்கள் அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
2022-23 நிதியாண்டில் இந்தியா – சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு வர்த்தகம் ₹2.96 லட்சம் கோடியாக (18%) அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய இந்திய தூதரக செயலாளர் பிரபாகர், “சிங்கப்பூரிலிருந்து ₹1.96 லட்சம் கோடி மதிப்பிற்கு இறக்குமதி செய்த இந்தியா, அந்நாட்டுக்கு ₹1 லட்சம் கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய பங்குகளில் ₹1.43 லட்சம் கோடி FDI முதலீட்டை சிங்கப்பூா் மேற்கொண்டுள்ளது” என்றார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் & டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் MI 18 முறையும், DC 15 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் MI, DC அணிகளுக்கு இடையேயான போட்டி சேஸிங்குக்கு கைக்கொடுக்கும் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 3.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.
Sorry, no posts matched your criteria.