News April 7, 2024
விராட்.. RCB-யை விட்டு வெளியேறு: ரசிகர்கள்

கோலி 100% முயற்சி செய்தும் RCB வெற்றி பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விராட் மட்டுமே பேட்டிங் சுமையை தோளில் சுமப்பதாகவும், யாரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றனர். நடப்பு IPL-இல், கோலி 146 ஸ்ட்ரைக் ரேட்டில் 316 ரன்கள் எடுத்துள்ளார், மற்ற அனைத்து RCB வீரர்களும் இணைந்து 496 ரன்களே எடுத்துள்ளனர். இதனால் கோலி RCB-யை விட்டு வெளியேற ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News April 10, 2026
மக்கள்தொகை கணக்கெடுப்பு.. 5.7 லட்சம் குடும்பங்கள் பதிவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் ஒருபகுதியாக சுய கணக்கெடுப்பு ஏப்.1 முதல் தொடங்கியது. இதன்மூலம், பொதுமக்கள் தாங்களாகவே ஆவணங்களை பூர்த்தி செய்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை, 5.72 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். TN-ல் ஜூலை 17, 2026 முதல் தொடங்க உள்ளது.
News April 10, 2026
BREAKING: விஜய் பரப்புரையில் மயக்கம்.. பதற்றம் உருவானது

காரைக்குடியில் விஜய்யின் பரப்புரையை காணச் சென்ற பெண் உள்பட 3 பேர் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பதற்றம் நிலவியது. எனினும், மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பகல் 12 மணி முதல் 2.30 வரை பரப்புரைக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், விஜய் பரப்புரை இடத்திற்கு செல்வதற்கே 2.30 மணிக்கு மேலாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2026
தமிழ் புத்தாண்டு விடுமுறை.. 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. இன்று (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC <


