News March 26, 2024

விளவங்கோடு தொகுதியில் பெண்கள் படை

image

விளவங்கோடு இடைத் தேர்தலில் 4 பிரதான கட்சிகளும் பெண்களையே வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளனர். இத்தொகுதியின் எம்.எல்.ஏ விஜயதாரணி, பாஜகவில் இணைந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் சார்பில் ஜெமினி ஆகிய 4 பெண்கள் இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

News March 26, 2024

பிரேமலு, பர்த் மார்க் OTT-இல் வெளியீடு

image

நஸ்லன், மமிதா பைஜு நடித்துள்ள ‘பிரேமலு’ திரைப்படம், வரும் மார்ச் 29ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவான இந்தப் படம், உலகளவில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகர் ஷபீர் மற்றும் மிர்னா மேனன் நடித்துள்ள ‘பர்த் மார்க்’ படமும் அதே தேதியில் ஆஹா (Aha) OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

News March 26, 2024

பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக்கிய பாஜக

image

சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேகா பத்ராவை பாசிர்ஹாட் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. மே.வங்கத்தில் சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திரிணாமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரேகா பத்ராவை, இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி பிரசாரம் குறித்து கேட்டறிந்தார்.

News March 26, 2024

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்

image

இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்க வேண்டும், இல்லாவிட்டால் மொத்தமாக முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு அளித்திருக்கிறார். எடப்பாடி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கக் கூடாது என்று மனுவில் குறிப்பிட்டிருக்கும் ஓபிஎஸ், சின்னம் முடக்கப்பட்டால் தனக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

News March 26, 2024

சிதம்பரம் கோயில் புராதன சின்னம் கிடையாது

image

சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன சின்னமாக அறிவிக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோயில் வளாகத்துக்குள் அனுமதியின்றி நந்தவனங்கள் அமைக்கப்படுவதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் பதிலை கோரியிருந்தது. அந்த பதிலில், சிதம்பரம் கோயில் புராதான சின்னம் அல்ல என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

News March 26, 2024

₹8,000 டூ ₹6 கோடியாக உயர்ந்த சம்பளம்!

image

பங்கு வர்த்தகத் தளமான ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தனது முதல் சம்பளம் குறித்து இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய 17 வயதில் பெங்களூருவில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்த போது மாதச் சம்பளமாக ரூ.8,000 பெற்றேன். பிரிட்டனை சேர்ந்த விபத்துக் காப்பீடு விற்பனை நிறுவனத்தில் மாலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை பணிபுரிவேன்” என்றார். நிகில் காமத் 2022-23இல் ஆண்டு சம்பளமாக ரூ.72 கோடி பெற்றிருந்தார்.

News March 26, 2024

‘சிங்கம் 4’ எப்போது?

image

சிங்கம் 4ஆம் பாகம் குறித்து, இயக்குநர் ஹரி சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “3 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், 4ஆம் பாகத்தையும் ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதனால், அந்த படத்திற்காக அதிக நேரம் செலவிட்டு கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு சிங்கம் 4 குறித்த எந்த ஐடியாவும் இல்லை. காலம் தான் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

அண்ணாமலைக்கு கிடுக்கிப்பிடி போடும் அதிமுக!

image

கோவை அதிமுக வேட்பாளரை போல கோட்டாவில் படித்து வரவில்லையென அண்ணாமலை நேற்று பேட்டியளித்தார். ஆனால் சிங்கை ராமச்சந்திரனின் தந்தை கோவிந்தராஜ், 1991-1996ஆம் ஆண்டு காலத்தில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். மேலும் அவர் இறந்த போது சிங்கை ராமச்சந்திரனுக்கு 11 வயது. அவர் எப்படி எம்.எல்.ஏ கோட்டாவில் இடம்பெற்றிருக்க முடியும். அதே போல, IIMஇல் எம்.எல்.ஏ கோட்டா இருந்ததா என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News March 26, 2024

சைதாப்பேட்டை நாதக செயலாளர் விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியில் இருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். 13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக செயலாற்றி வந்த அவர், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள் ஓரம் கட்டப்படுவதாக ராஜ்குமார் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

News March 26, 2024

சேஷு மறைவு: சோகத்தில் பொதுமக்கள்

image

மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் சேஷு இன்று காலமானார். ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இவர், 2002இல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின், சந்தானத்துடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும், கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பின் போது மக்களுக்கு தேவையான பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வந்தார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!