India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஷேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கூரை சரிந்ததற்கு, கேளிக்கை விடுதி அருகே மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளே காரணமென கூறப்படுகிறது. நிலத்திற்கு அடியில் ஏற்பட்ட அதிர்வை தாங்க முடியாமல் கட்டடம் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 1,749 பேரில், 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய பரிசீலனையின் போது 664 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 56 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதே போல விளவங்கோடு இடைத்தேர்தலில் 14 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பிறரை துன்புறுத்துவதும், கொடுமைப்படுத்துவதும் காங்கிரஸின் கலாசாரம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டுள்ள மோடி, காங்கிரஸ் தனது சுயநலத்திற்காக பிறரது அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், 140 கோடி இந்தியர்களும் காங்கிரஸை நிராகரிப்பதில் ஆச்சரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி. ஜெய்பூரில் முதலில் பேட்டிங் செய்த RR அணி 185/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் மட்டும் 84 ரன்கள் குவித்தார். குறிப்பாக நோர்க்யா வீசிய கடைசி ஓவரில் 4 4 6 4 6 என 25 ரன்களை அவர் விளாசினார். டெல்லி தரப்பில் கலீல், முகேஷ், நோர்க்யா, அக்ஷர், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பெங்களூருவில் உள்ள சினிமா தியேட்டருக்கு லேப்டாப்புடன் சென்ற நபர், கடமை உணர்ச்சியுடன் வேலை செய்துகொண்டே சினிமா பார்க்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வேலை – சமநிலை குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. ரிஷிகா தனது X பக்கத்தில், ‘நேற்று சினிமாவுக்கு சென்றிருந்தேன். யாரோ ஒருவர், படம் முழுக்க லேப்டாப்பும் கையுமாக இருந்தார்’ என பதிவிட்டார். இதற்கு கலவையான விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தனியார் ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனவே தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’ என கூறியிருந்தார். இதற்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது X பக்கத்தில், ‘மக்களவைத் தேர்தலில் போட்டியிட எனக்கு தைரியமில்லை’ என்று கூறுமாறு எடிட் செய்த படத்தை பகிர்ந்து கிண்டலடித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஷேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர கிளம்பியிருக்கிறது. ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக்கை கேப்டன் ஆக்கியதால் ரோஹித் விசிறிகள் ஹர்திக்கிற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், அவர் அளவுக்கதிகமாக கலாய்க்கப் படுவதால் மறு தரப்பினர் We love you hardik என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சந்தை மதிப்பு ₹20 லட்சம் கோடியை கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று ₹2987 என்ற நிலையை எட்டியதால் ஒரே நாளில் ₹70,039 கோடி லாபம் ஈட்டப்பட்டது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹20,21,000 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் டிஸ்னியுடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 1ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகளை தற்போது ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும் வங்கிக் கணக்குகள் முடித்து வைக்கப்படுவதால் அன்றைய தினம் 2000 நோட்டுகள் பெறப்படாது என்று RBI அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.