News April 10, 2024

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வாய்ப்பு

image

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாஜகவுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பாஜக வென்றால் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றார். மேலும், விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் வென்று விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும் எனவும் கூறினார்.

Similar News

News December 5, 2025

நாடு முழுவதும் முழு கட்டணமும் Refund

image

நாடு முழுவதும் விமானங்கள் ரத்தானதால் கடும் கோபத்தில் உள்ள பயணிகளிடம் இண்டிகோ பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. அதேபோல், இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்குமான கட்டணத்தையும் திரும்ப தருவதாக அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்குவதற்கு அறைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் விமான நிலையங்களில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் <<18476104>>இண்டிகோ<<>> தெரிவித்துள்ளது.

News December 5, 2025

விஜய் கட்சியில் இன்னொரு அதிமுக தலைவர் இணைந்தார்

image

2026 தேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், மாற்று கட்சியினரை இணைக்கும் முயற்சியில் திராவிட கட்சிகளுடன் சேர்ந்து தவெகவும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், குமரி அதிமுக Ex MLA முத்துகிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். MGR காலகட்டத்தில், 1980-ல் குமரி அதிமுக MLA-வாக இருந்துள்ளார். ஏற்கெனவே MGR உடன் நெருக்கமாக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

ஸ்மிருதி மந்தனாவின் நிச்சயதார்த்த மோதிரம் எங்கே?

image

திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஸ்மிருதி மந்தனா, தனது இன்ஸ்டாவில் போட்ட முதல் பதிவு பேசுபொருளாகியுள்ளது. தனது விளம்பர வீடியோவை பகிர்ந்த அவர், அதில் நிச்சயதார்த்த மோதிரம் அணியாதது பதிவாகியுள்ளது. இதையடுத்து ‘திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டது உண்மைதானா?’ என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, தனது திருமணம் சார்ந்த அனைத்து போட்டோக்களையும் <<18381176>>ஸ்மிருதி<<>> தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கியிருந்தார்.

error: Content is protected !!