India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ரூ.40 லட்சம் வரை அதிகாரப்பூர்வமாக செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி தந்துள்ளது. ஒரு தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், விளம்பரம், பேரணி, வாகன செலவுகள் அந்த வேட்பாளரின் செலவு கணக்கில் வைக்கப்படும். இந்த கணக்கை தேர்தல் முடிந்த 30 நாள்களில் அளிக்க வேண்டும். கடந்த 2019ல் செலவு தொகை ரூ.28 லட்சம், 2022ல் ரூ.40 லட்சம் என உயர்த்தப்பட்டது.
பெரிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ரூ.95 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. 1951-52ல் இத்தொகை ரூ.25,000ஆக இருந்தது. பிறகு 1971ல் ரூ.35,000, 1980ல் ரூ.1 லட்சம், 1984ல் ரூ.1.5 லட்சம், 1996ல் ரூ.4.5 லட்சம், 1998ல் ரூ.15 லட்சம், 2004ல் ரூ.25 லட்சம், 2014ல் ரூ.70 லட்சம், 2022ல் ரூ.95 லட்சம் என உயர்த்தப்பட்டது. சிறிய மாநிலங்களில் ரூ.75 லட்சம் செலவிட அனுமதி தரப்பட்டுள்ளது.
விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சில இடங்களில் மட்டுமே பேசிவிட்டு, பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பாஜகவினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. அதேபோல், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டமும் சேரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர் பாதிலேயே கிளம்பிய நிலையில், சரத்குமார் மட்டும் பெருங்குடி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, ஏப். 2வது வாரத்தில் பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார். பாஜக கூட்டணி கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.4, 5ல் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டது முதல் அடுத்தடுத்து சர்ச்சை உருவாகி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் அந்த அணி தோல்வியடைந்ததால், ஹர்திக்கை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் விமர்சிக்கின்றனர். அவரின் மனைவியை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன், அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா.வும் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பொது செயலாளர் குட்டெரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தேர்தல் நடத்தும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், அரசியல் கட்சியினர், மக்கள் உள்ளிட்ட அனைவரின் உரிமைகளையும் காக்கும் என நம்புகிறோம். நியாயமான, சுதந்திரமான சூழலில் தேர்தல் நடந்தால்தான் அனைவரும் வாக்களிக்க இயலும்” என்றார்.
பீகாரில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐஎம்எல் 3 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்சனைகளை பாஜக ஏற்படுத்துவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கு தான் போட்டி. இடையில் ‘நானும் இருக்கிறேன்’ என பாஜக புலம்பிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தலே நடைபெறாது என்றார்.
புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது சிறுநீர்ப்பை, அருகிலுள்ள உறுப்புகளுக்கும் பரவுகிறது. சில அறிகுறிகளின் மூலம் இதனை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவில் அதிக சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது வலி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம், சிறுநீரில் ரத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
100 நாள் வேலைத் திட்ட ஊதியம், மத்தியில் I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால் ரூ.400ஆக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தேசிய ஊரக வேலை திட்ட சம்பளத்தை மோடி ரூ.7 உயர்த்தியுள்ளார். இந்த பெரிய நிதியை வைத்து, என்ன செய்வீர்கள் என அவர் கேட்டாலும் கேட்கக்கூடும். I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்த முதல்நாளே அந்த சம்பளம் ரூ.400ஆக உயர்த்தப்படும்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.