India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரி செலுத்துதல், முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31இல் முடிவடைகிறது. அவை ➫IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும் ➫மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் Re-KYC பூர்த்தி செய்ய வேண்டும். ➫வீட்டுக் கடன்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31 வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
நடிகை அதிதி ராவும் நடிகர் சித்தார்த்தும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நேற்று தெரிவித்தனர். இதையடுத்து, சினிமா பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா ‘வாழ்க்கை முழுவதும் இன்பம் பொங்க வாழ்த்துகள்’ என சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வார இறுதியில் சென்னை வரும் ராகுல் ஒரே நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். ராகுல் வந்து சென்ற பின் பிரியங்கா மற்றும் கார்கே ஒருவர் பின் ஒருவராக வருவார்கள் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரைத்தம்பி (எ) கந்தசாமி காலமானார். சி.பா.ஆதித்தனாரால் துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி அக்கட்சி கலைக்கப்பட்ட பின் காங்கிரஸில் தனது வாழ்நாள் முழுவதும் இருந்தவர். காங்., கட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரை, முன்னாள் முதல்வர் அண்ணா “டார்பிட” தாரைத்தம்பி என அன்புடன் அழைத்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
c-VIGIL செயலி மூலம் இதுவரை 79 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை வந்த புகார்களில் 99% புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 89% புகார்கள், 100 நிமிடங்களுக்குள் முடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் c-VIGIL செயலி மூலம் வந்த 1,383 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ராசிபுரம் அருகே எம்பி சின்ராஜூக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கமடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எம்பியின் ஆலையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 1 முதல் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு வீட்டு வாடகை செலுத்தும்போது அளிக்கப்படும் ரிவார்டு புள்ளிகளை எஸ்பிஐ நிறுத்தவுள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்ரல் 1 முதல் பல்வேறு நிதிக்கொள்கைகள் மாறவுள்ளது. இந்நிலையில், எஸ்பிஐ எலைட், எலைட் அட்வான்டேஜ், கார்டு பிளஸ், சிம்ப்ளி கிளிக், ஆரும் ஆகிய கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் அளிப்பதை எஸ்பிஐ நிறுத்தவுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்ட அவர், ‘பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜி.எஸ்.டி கொண்டு வந்த பின் கோவையில் மில்கள் மூடப்பட்டுள்ளன. 300% மின் கட்டண உயர்வால், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன’ என்றார்.
ரூ.1,823 கோடி செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதை வரி தீவிரவாதம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2017-18 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் முறையாக வரி செலுத்தாத காரணத்துக்காக வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், வரி தீவிரவாதம் என விமர்சித்துள்ளார்.
ஏப்.2 முதல் 4ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். இந்நிலையில், மழை பெய்யும் என வானிலை மையம் கூறியதால், மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.