India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
4 முதல் 9ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கான தேர்வுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள தங்களை பாஜக புறக்கணிப்பதாக, இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடிக்கு தங்கள் கட்சி தீவிர ஆதரவை அளிக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியில் நாங்கள் அவமதிக்கப்படுகிறோம் என வேதனை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு – கொல்கத்தா இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரைசதம் கடந்திருக்கும் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை தன் வசப்படுத்தியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கு ஆரஞ்சு தொப்பி கொடுத்து கௌரவிப்பது வழக்கம். இதுவரை ஹென்ரிக் க்ளாசனிடம் இருந்த இத்தொப்பி தற்போது கோலியிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
விவசாயி சின்னத்திற்கு பதில் மைக் சின்னத்தை கொடுத்ததன் மூலம் பாஜகவின் B டீம், நாம் தமிழர் கட்சி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தென்காசி பிரசாரத்தில் பேசிய அவர், தன்னை மிகப்பெரிய தலைவனாக மாற்றுவதற்காக அண்ணாமலை போராடுவதாகவும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாத பாஜக இனிவரும் காலங்களில் என்ன செய்யும் எனவும் வினவினார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி 36 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தால் RCB தற்போது 12 ஓவர்கள் முடிவில் 104/2 ரன்கள் எடுத்துள்ளது. டு பிளெசிஸ் 8, கேமரூன் கிரீன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கோலி 50, மேக்ஸ்வெல் 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 77 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல்கள்தான் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் அடையாளம் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தருமபுரி தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், ‘ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆனால், பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை மாலை வெளியாகிறது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதேபோல விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் தான், தமிழகத்திற்கு அவர்கள் வேலை தேடி வருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்த அவர், காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தற்போது காலை உணவுத் திட்டமாக விரிவுபடுத்தியுள்ளதாக கூறினார். மேலும், இந்தியாவை காப்பதற்கான வியூகமே, மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறி வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள DOT, இத்தகைய அழைப்புகளால் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய, தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB FACT CHECK அமைப்பு, ‘இது தவறான தகவல். தேர்தல் ஆணையம் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.