India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி முதல் முறையாக ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘டியர்’, கார்த்தி, தமன்னா நடித்த ‘பையா’ ரீ-ரிலீஸ், ஃபகத் பாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’, பிரணவ் மோகன்லால் நடித்துள்ள ‘வருஷங்களுக்கு ஷேஷம்’ ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளன.
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், குஜராத் வீரர் ரஷீத் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து ஜாஸ் பட்லர் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன், பேட்டிங்கிலும் 4 பவுண்டரிகள் விளாசிய அவர், 11 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இது குஜராத் அணிக்கு கிடைத்த 3ஆவது வெற்றியாகும்.
தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்படும் பணம் ஒருபக்கம், அதிரடியான வருமான வரித்துறை ரெய்டுகள் மறுபக்கம் என தேர்தல் களம் தீப்பிடிக்கிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடந்து வருகிறது. தேர்தல் நேர பணப்பட்டுவாடாவை தடுக்க மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய், ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி முன்பு கைது செய்யப்பட்டார். பிறகு அவரது இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது பாஜக மீது டிடிவி வைத்த குற்றச்சாட்டுகள் ஏராளம். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அமமுக போட்டியிடுகிறது. இதை சுட்டிக்காட்டி, முந்தைய கசப்பை 2 கட்சிகளும் மறந்து விட்டனவா, அரசியலில் இதெல்லாம் சகஜமா என மக்கள் பேசி வருகின்றனர்.
லவ்வர் படத்தில் வரும் ஐஷு கதாபாத்திரத்தை விமர்சித்தவர்களுக்கு, நடிகை ரினி பதிலடி கொடுத்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “படத்தில் வரும் கதாபாத்திரம் பிடிக்காததால், சில முட்டாள்கள் என்னை நேரடியாக திட்டுகிறார்கள். ஒரு நடிகையிடம் எப்படி இவர்களால் இழிவாக பேச முடிகிறது. கருத்துகளை அவமரியாதையுடன் காட்ட வேண்டிய அவசியமில்லை. கதாபாத்திரத்தை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், கச்சத்தீவு விவகாரத்தை பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் தமிழ்நாட்டில் பிரச்னையாக்க முயற்சிப்பதாகவும், அடிப்படையில்லாத தகவல்களை வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டினார். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்க பிரச்னைகள் குறித்து அவர்கள் பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
ராமநாதபுரத்தில் உள்ளடி வேலைகள் உச்சகட்டத்தில் நடந்து வருவதாக முஸ்லீம் லீக் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. நவாஸ்கனியுடனான முன்பகை உள்ளிட்ட காரணங்களால் தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவரை ஒரு சட்டமன்றத் தொகுதியில்கூட முழுமையாகப் பிரசாரம் நடக்கவில்லையாம். அந்தளவுக்கு இத்தொகுதியில் ஈகோ யுத்தம் நடக்கிறதாம்.
நடிகர் பரத் நடித்துள்ள ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஃப்ரைடே பிலிம் பேக்டரி & பி.ஜி.எஸ். ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டப்பிங் & போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் மும்முரமாக நடந்து வருகின்றன.
முன்னாள் தலைமைச்செயலாளர் பி.எஸ்.ராகவன் (97) சென்னையில் காலமானார். 1961இல் தேசிய ஒருமைப்பாட்டு குழுவில் செயலாளராக பொறுப்பேற்று, நாட்டின் பிரதமர்களான நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, இவர் உணவுத்துறை கூடுதல் செயலாளராக இருந்தபோது தான் தமிழகத்துக்கு கூடுதல் அரசியை ஒதுக்கினார். இது, எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவர பெரும் உதவியாக இருந்தது.
Sorry, no posts matched your criteria.