News April 11, 2024
IPL: ரஷீத் கானுக்கு ஆட்டநாயகன் விருது

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், குஜராத் வீரர் ரஷீத் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து ஜாஸ் பட்லர் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன், பேட்டிங்கிலும் 4 பவுண்டரிகள் விளாசிய அவர், 11 பந்துகளில் 24 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இது குஜராத் அணிக்கு கிடைத்த 3ஆவது வெற்றியாகும்.
Similar News
News November 11, 2025
இந்த நகரங்களில் உள்ளவர்களுக்கு கம்மி சம்பளம்

செய்யுறது ஒரே வேலை. ஆனால் சம்பளம் மட்டும் ஒருத்தருக்கு அதிகம் ஒருத்தருக்கு குறைவு என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கலாம். அதுதொடர்பாக Levels.fyi ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் Software Engineer-களுக்கு எந்தெந்த நகரங்களில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுடைய சம்பளம் போதுமானதா இருக்கா?
News November 11, 2025
சரியான பதிலடி கொடுக்கப்படும்: PM மோடி

டெல்லியில் அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என PM மோடி தெரிவித்துள்ளார். பூடானில் பேசிய அவர், இரவு முழுவதும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் எனவும், சதித்திட்டத்தின் ஆணிவேர் வரை சென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News November 11, 2025
BREAKING: நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக PM மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இரு நாள்கள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ள PM மோடி நாளை டெல்லி திரும்பியதும், மாலை 5:30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


