India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீதா கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர சிரமமாக இருந்தது என நடிகை மிருணாள் தாகூர் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஒரு படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இதயம் உடைவது போல் இருப்பது தான். ஒரு கதாபாத்திரம் நமக்கு பிடித்துவிட்டால், நாம் அதுபோலவே மாறிவிடுகிறோம். நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் சீதா மகாலட்சுமி” எனத் தெரிவித்தார்.
ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், மேக்ஸ்வெல்லுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவருக்கு, அடுத்த போட்டியில் ஓய்வு வழங்கப்படவுள்ளது. SRH-RCB இடையேயான 30ஆவது ஐபிஎல் போட்டி, வரும் ஏப்.15ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்ததாகக் கூறிய முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. திமுக இதுவரை ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது; டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடையும் என்று விமர்சித்துள்ள பாஜக, தமிழக வளர்ச்சிக்கு மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பே காரணம் என தெரிவித்துள்ளது.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 7ஆவது சுற்றில், தமிழக வீரர் குகேஷ் தோல்வி அடைந்துள்ளார். பிரெஞ்சு வீரர் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான இப்போட்டியில், குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். போட்டியின் இறுதியில் போதிய நேரமில்லாததால், குகேஷ் தோல்வி அடைந்தார். இதனால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவர், 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது இத்தொடரில், அவர் சந்திக்கும் முதல் தோல்வியாகும்.
பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரூர் ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 3.40 வரை) இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை எப்படி இருக்கு?
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும், பிற பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரின்பேரில் தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கோவை ஆவாரம்பாளையத்தில் இரவு 10 மணிக்கு மேல் பாஜகவினர் பரப்புரை செய்ததாக திமுக சார்பில் வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினிடம் கை கட்டி கொண்டு கமல் நிற்பதாக அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும் நடிகையுமான விந்தியா விமர்சித்துள்ளார். சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தமிழகத்தில் தாமரையும் மலரக்கூடாது, திமுக கூட்டணியும் வளரக்கூடாது என்றார். திமுகவை எதிர்த்து கட்சித் தொடங்கிய கமல்ஹாசன் தற்போது உதயநிதி முன்பு கைகட்டி கொண்டு நிற்பதாகவும் அவர் விமர்சித்தார்.
தங்கம் விலை அதிகரிப்பது, இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். *நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க வழிவகுக்கும் * இந்திய வர்த்தக சமநிலையை பாதிக்கும் *தங்க நகைக்கடன் துறையை பாதிக்கும். ஏற்கனவே கடன் வாங்கியோர் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் *நகைத் தயாரிப்பு தொழில்துறையில் செலவினத்தை அதிகரித்து, லாபம் குறைய வழிவகுக்கும் *இந்திய பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும்.
ஆம் ஆத்மி அரசை கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதி நடப்பதாக டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி மர்லினா குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அரசை கலைப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லி மக்கள் வழங்கிய அதிகாரத்தை சட்டத்திற்குப் புறம்பான வழியில் பாசிச சக்திகள் பறிக்கத் துடிக்கின்றன எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.