India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது எனப் பிரதமர் நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுவரை எத்தனையோ பிரதமர்களை இந்தியா பார்த்துள்ளது. ஆனால், மோடி போல வசூல் ராஜாவை இதுவரை பார்த்ததில்லை என்ற அவர், ரெய்டு என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பாஜக வசூல் செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், ஊழல் கறை படிந்தவர்களை மோடி சுத்தமாக்கி விடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
430 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக எப்படி 400 இடங்களில் வெல்லும் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதியிலும் தோல்வி அடையும் என்ற அவர், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்றார். மேலும், ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களிலும் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தருமபுரியில் 2014இல் தன்னை வெற்றிபெற வைத்து போல் 2024இல் தனது மனைவியை வெற்றிபெற வைக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தருமபுரியில் கடந்த 5 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் அனைத்து திட்டங்களையும் செளமியா அன்புமணி வெற்றி பெற்ற உடனே நிறைவேற்றுவார் என உறுதியளித்த அவர், தருமபுரி பாமகவின் கோட்டை என்பதை மீண்டும் பொதுமக்கள் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் தலைவர்களும் தற்போது களத்தில் அனல் பறக்கப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரப் பரப்புரை நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி யாருக்கு? கமெண்ட்டில் சொல்லுங்க.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு, எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில், உளுந்து, பாசிப் பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். முழு உளுந்து 100 கி. மூட்டைக்கு ₹700, சாதா உளுந்து ₹200, தொலி உளுந்து ₹100 மற்றும் பாசிப் பருப்பு ₹150 வரை விலை உயர்ந்துள்ளன.
இது யார் ஆட்சியில் தொடரக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், ‘மோடி வளர்ச்சியின் நாயகன்’ என்பது பொய் என்று 10 ஆண்டுகளில் தெரிந்து விட்டது. ஜனநாயகம் காக்கும் போர்க்களத்தில் நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க மூன்றாம் பாலினத்தவர் புள்ளிவிவரங்களை சேகரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் நடத்தை விதி நீக்கப்பட்ட பின் 3 மாதங்களில் இந்த புள்ளிவிவரங்களை சேகரிக்கவும், ஏற்கெனவே சலுகை வழங்கப்பட்டால் அது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு இல்லாமல் வாக்குப்பதிவு நேர்மையாக நடந்தால், பாஜக 180 தொகுதிகளில் கூட வெல்லாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவின் ‘400 தொகுதிகளில் வெற்றி’ என்ற இலக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், 400 இடங்களில் வெல்வோம் எனக் கூற அவர்கள் என்ன ஜோதிடர்களா? எனக் கேள்வி எழுப்பினார். இந்தத் தேர்தல் மக்கள் பிரச்னைகளை முன் வைத்த தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.
ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவச் சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ரூ.1 இலட்சம் வரையிலான பணத்தைத் திரும்பப் பெற முடியும். இதற்கு முன்னதாக, இந்த வரம்பு ரூ.50,000ஆக இருந்தது. படிவம் 68Jஐ பயன்படுத்தி சந்தாதாரர் அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்காக முன் பணம் கோரலாம்.
பெரம்பலூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனப் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்துள்ளார். ஊழல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இறுதி செய்யும் தேர்தலாக மக்களவைத் தேர்தல் உள்ளது. இதில் குடும்ப ஆட்சி நடத்தும் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், கூட்டணிக் கட்சியினர் உதவியுடன் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.