News May 1, 2024

12.3% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

image

நாடு முழுவதும் கடந்த மாதம் பெட்ரோல் விற்பனை 12.3% அதிகரித்துள்ளது. கடந்த 2023இல் ஏப்ரல் மாதம் பெட்ரோல் விற்பனை 2.65 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், 2024இல் ஏப்ரல் மாதம் 2.97 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், டீசல் விற்பனை 2.3% சரிந்து 7 மில்லியன் டன்னாக இருந்தது. தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதே பெட்ரோல் தேவை அதிகரித்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.

News May 1, 2024

DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்

image

அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்கவுள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 50%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் சலுகை, விடுதி கட்டண சலுகை 25% உயருகிறது. குழந்தை கல்வி சலுகையாக மாதம் ₹2812.5, விடுதி கட்டண சலுகையாக ₹8437.5, திவ்யாங் குழந்தை பராமரிப்புக்கு ₹5625 பெறுவர்.

News May 1, 2024

10 லட்சம் பேரில் 7 பேருக்கு மட்டுமே பாதிப்பு

image

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சம் பேரில் 7 பேர் மட்டுமே பாதிப்பை சந்தித்ததாக ICMR முன்னாள் விஞ்ஞானி ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார். கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் கூறியது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த ராமன், தடுப்பூசி செலுத்திய 2-3 மாதங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.

News May 1, 2024

காங்கிரசுக்கு மோடி சவால்

image

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்போம் என அறிவிக்கும் தைரியும் உள்ளதா என்று காங்கிரஸுக்கு மோடி சவால் விடுத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை யாராலும் பறிக்க முடியாதென்றும் கூறினார். மத அடிப்படை இடஒதுக்கீடு அளிப்போம் என அறிவிக்கும் தைரியம் காங்கிரஸ், காங்கிரஸ் இளவரசருக்கு (ராகுல்) உள்ளதா என்றும் சவால் விடுத்தார்.

News May 1, 2024

உலகை கலக்கிய டாப் 10 கேங்ஸ்டர் திரைப்படங்கள்

image

நிழல் உலக தாதா கதைகளத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. அதுபோன்ற கதையம்சத்தோடு, உலகளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டாப் 10 படங்களை தெரிந்து கொள்வோம் * காட் பாதர் * அமெரிக்கன் கேங்ஸ்டர் * தி அன்டச்சபிள்ஸ் * குட் பெல்லாஸ் * டானி பிராஸ்கோ * ஸ்கார் பேஸ் * கேசினோ * தி டிபார்டட் * பல்ப் பிக்சன் * ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் அமெரிக்கா

News May 1, 2024

அமேதி, ரேபரேலியில் காங்., போட்டியிட ராகுல் எதிர்ப்பு

image

அமேதி, ரேபரேலியில் தனது குடும்ப உறுப்பினர்கள் போட்டியிடுவதை ராகுல் எதிர்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரேபரேலியில் போட்டியிட ராகுல் முன்பு ஒப்புக் கொண்டதாகவும், ஆனால், தற்போது விருப்பமில்லை எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், ராகுல், பிரியங்காவை சமாதானப்படுத்தும் இறுதிக்கட்ட முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தெரிவிக்கின்றன.

News May 1, 2024

IPL: சென்னை அணி பேட்டிங்

image

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் CSK பேட்டிங் செய்ய உள்ளது. CSK அணியில் சிறு மாற்றமாக பதீரனா, தேஷ்பாண்டேவிற்குப் பதிலாக ரிச்சர்ட் க்ளாசென், ஷர்துள் விளையாடுகின்றனர். புள்ளிப் பட்டியலில் CSK நான்காவது இடத்திலும், PBKS 8ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 1, 2024

5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களிலும் சில இடங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

ஆஜராக 7 நாள்கள் அவகாசம் கேட்கும் பிரஜ்வால் ரேவண்ணா

image

பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் கோரியுள்ளார். பிரஜ்வால் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவானார். இந்நிலையில், பிரஜ்வால் நேரில் ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு வழக்கறிஞர் மூலம் பதிலளித்துள்ள அவர், ஒரு வாரத்தில் நேரில் ஆஜராவதாக கூறியுள்ளார்.

News May 1, 2024

வாக்குறுதி என்ற பெயரில் மோடி பொய்களை கூறுகிறார்

image

பாஜக தொழிலாளர்களின் போராட்ட உரிமைகளை பறித்துள்ளதாக CPM தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தியது மட்டுமல்லாமல், கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை கடைபிடிப்பதால் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வாக்குறுதி என்ற பெயரில் கணக்கற்ற பொய்களை பிரதமர் மீண்டும் கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!