News May 1, 2024
5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களிலும் சில இடங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
ராசி பலன்கள் (11.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 10, 2025
பெற்றோர்களே இதை கவனியுங்க!

குழந்தைகளிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.
News December 10, 2025
செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது

செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 15% வரை கட்டணம் உயரலாம் என கூறப்படுகிறது. இதன்படி, பரவலாக பயன்படுத்தப்படும் 28 நாள்கள் வேலிடிட்டியுடன் கூடிய ₹299 பேக், ₹50 அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். இது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். கடந்த நவம்பரில், முன்னணி நிறுவனங்கள் தங்களது ப்ளானில் ₹10- 200 வரை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


