India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிபிஐ கைதுக்கு எதிராக, ஜாமின் கோரி பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 6ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. மதுபான முறைகேடு தொடர்பாக கவிதாவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்தது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிபிஐ வழக்கில் ஜாமின் கோரியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மே 6ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டற்கு தேர்தல் நடைமுறையை காரணம் காட்டியிருக்கிறது மத்திய அரசு. ஆனால், தேர்தல் நடைமுறைகள் தொடங்கி 1 மாத காலத்திற்கு பின் படம் நீக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசியினால் ஆபத்து ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதே பிரதமரின் படம் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். கடந்த முறை போல் பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்ற அவர், இந்தமுறை 275 சீட் வரை பாஜக வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நெல்லையில் நயினார் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மற்ற பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா? என்று தெரியாது என்றும் கூறினார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் பிரையன் லாரா. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த தனிநபர் (400) என்ற அவரது சாதனையை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. 131 டெஸ்டில் 11,953 ரன்களும், 299 ODI போட்டிகளில் 10,405 ரன்களும் அவர் எடுத்துள்ளார். ‘தி பிரின்ஸ் ஆஃப் போர்ட் ஆஃப் ஸ்பெயின்’ என அழைக்கப்படும் பிரையன் லாராவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக நவீன், பெருமாள், சதீஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று PBKS-க்கு எதிரான போட்டியில் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக CSK-வின் தேஷ்பாண்டே விளையாடவில்லை. தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே முஸ்தஃபிசூர் நாடு திரும்பி விட்டார். தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பதிரனாவும் விசா நடைமுறைக்காக இலங்கை திரும்பியதால், CSK அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனதா தளம் மற்றும் பாஜக தலைவர்களுக்குப் பெண்கள் மீது மரியாதை இருந்தால், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டுமென, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை காங்கிரஸ்தான் வெளியிட்டதாக குமாரசாமி மறைமுகமாகக் குற்றம்சாட்டியது குறித்து பதில் அளித்த அவர், இதுபோன்ற மலிவான அரசியல் செய்ய வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்றார்.
வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா சோதித்து வருகிறது. அதாவது, வாட்ஸ்அப் கொள்கைகளை மீறும் பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதில் Chat செய்ய முடியாமல் முடக்கப்படலாம். இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், குழுக்களில் இருந்தும் மெசேஜைப் பெறுவதில் தடை இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்த அம்சம் சோதனை முறையில் இருப்பதால் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். கல் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே, சேதுராமன் என்பவர் கைதான நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கல்குவாரியால் பல சிக்கல்களை சந்திப்பதால் அதனை மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,715க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.87க்கும், கிலோ வெள்ளி ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.