India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பையை இந்திய அணியே வெல்ல வாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சங்கக்கரா தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை இப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி குறித்துக் கருத்துத் தெரிவித்த சங்கக்கரா, வலுவான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறந்த பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்களைக் கொண்ட கலவையாக இந்திய அணி உள்ளதென்றும் பாராட்டினார்.
ஜூன் 2ஆவது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தக் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
மேலே படத்தில் இருப்பவர் தமிழ்நாட்டின் முன்னணி இசையமைப்பாளர். சமீப காலமாக தொடர்ந்து செய்திகளில் பேசப்படும் அவர், கோடையை சமாளிக்க மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு கடற்கரையில் நேரத்தைப் போக்குவது போன்ற போட்டோவை அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர் யார் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
மோடி மாதிரியான ஒரு பிரதமரை இதுவரை பார்த்ததில்லை என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத்பவார் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் மீதான பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடியின் பேச்சில் உண்மையும், யதார்த்த தன்மையும் இல்லை எனக் குற்றம்சாட்டினார். பிரதமர் முக்கியமான பிரச்னைகள் குறித்து பேசாமல், மக்களை திசைத்திருப்பும் வேலையை செய்து வருவதாகவும் அவர் சாடினார்.
’GOAT’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை ஸ்ரீலீலா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் தன்னுடைய அறிமுகம் ஒரு பாடலில் இருக்கக் கூடாது என அவர் நினைப்பதால், இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஹீரோயினாக அவர் தமிழில் அறிமுகமாக உள்ளார். இவர் தெலுங்கில், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து ஹிட் படங்களை கொடுத்தவர்.
வட மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதே நேரம், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும்போது மணிக்கு 30 கி.மீ முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசும். இதனால், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றும் வீசும்.
1) ஒருகட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற எம்.பி தேர்தலில் 2% இடங்களில் (11 தொகுதிகள்) வெற்றிபெற வேண்டும். இதனை 3 வெவ்வேறு மாநிலங்களில் பெற வேண்டும். 2) 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% வாக்குகளோடு 4 எம்பிக்களை பெற வேண்டும். 3) 4 மாநிலங்களில் அக்கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த 3 நிபந்தனைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்தால் அக்கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு மத்தியில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் 10 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாகவுள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அவர் சமீபத்தில் சந்தித்ததாகத் தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களின் பாரம்பரியத்தை மேம்படுத்த காங்., பாடுபடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி, மொழி, பிராந்தியத்தின் அடிப்படையில் காங்., சமூகத்தைப் பிரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். அதனால்தான், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க முயற்சிப்பதாகக் காங்கிரசை அவர் விமர்சித்தார்.
சமூக ஊடகங்களில் தேர்தல் கண்ணோட்டத்துடன் போலி வீடியோ பரப்பப்படுவதை தடுக்கக்கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.