News May 2, 2024
செந்தில் பாலாஜியின் தம்பி என்ன ஆனார்?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு மத்தியில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் 10 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாகவுள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அவர் சமீபத்தில் சந்தித்ததாகத் தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 11, 2025
ஆயுதங்களை ஒப்படைத்து 11 நக்சல்கள் சரண்

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் நக்சல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிராவில் நேற்று 11 நக்சல்கள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களை பற்றி தெரிவித்தால் ₹82 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், லெகமி என்பவர் மீது 43 என்கவுண்டர் உள்பட 88 குற்ற வழக்குகள் உள்ளது.
News December 11, 2025
எனது காதல் இதன் மீது மட்டுமே: ஸ்மிருதி மந்தனா

திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து ஸ்மிருதி மந்தனா முதல்முறையாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை எனவும், இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்ததும் உள்ளுக்குள் பிறக்கும் உத்வேகம் தான் தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகளில் இருந்து வெளியேற இந்த உத்வேகம் தான் தன்னை வழிநடத்துவதாகவும் கூறியுள்ளார்.
News December 11, 2025
அமித்ஷா பதிலில் பதட்டம் தெரிந்தது: ராகுல்

மக்களவையில் வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பதிலில் பதட்டம் தெரிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருப்பது பற்றியோ, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து CJI நீக்கியது குறித்தோ அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. CCTV வழங்கப்படாததற்கு அவர் கூறிய காரணம் அபத்தமாக இருந்ததாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.


