News May 3, 2024

இலவச பேருந்து பயண திட்டத்தை நீட்டிக்க ஆய்வு

image

தமிழகத்தில் தற்போது சாதாரண கட்டணப் பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இத்திட்டத்தை கூடுதலாக எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிப்பு செய்ய சென்னை போக்குவரத்துக் கழகம் ஆய்வு நடத்தி வருகிறது. சொகுசு பேருந்துகளில் பெண் பயணியர் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது? ஏன் அவர்கள் சொகுசு பேருந்துகளில் செல்ல விரும்புகின்றனர்? கூட்ட நெரிசல் காரணமா? போன்ற காரணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

News May 3, 2024

அபாய சங்கிலியை இழுத்தும் ரயில் ஏன் நிற்கவில்லை?

image

மருத்துவ அவசரம், விபத்துக் காலங்களில் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்பது விதி. ஆனால், கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணியை மீட்க அபாயச் சங்கிலியை பலர் இழுத்த போதிலும் ரயில் நிற்கவில்லை. 8 கி.மீ. தூரத்திற்கு பின் ரயில் நின்றது. ரயில்களின் பாதுகாப்பு குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், விபத்து குறித்து உயர்மட்டக்குழு விசாரிக்க ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

News May 3, 2024

தமிழ்நாட்டில் மின் தடைக்கு வாய்ப்பில்லை

image

தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து வருவதால், மின் தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், தென் மாவட்டங்களில் காற்றாலை உற்பத்தி தொடங்கியுள்ளது. மின் உற்பத்திக்குச் சாதகமாக காற்று வீசத் தொடங்கியதால், நேற்று ஒரே நாளில் 916 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாட்டில் மின் தடைக்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

News May 3, 2024

CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

image

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்.15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு இத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் அறியலாம். மேலும், UMANG செயலியின் மூலமும் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News May 3, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி மரணம்

image

சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கர்ப்பிணி விழுந்தவுடன் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பிறகும் ரயில் நிற்கவில்லை என குற்றம் சாட்டிய உறவினர்கள், சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளத்தில் நடந்து சென்று உடலைத் தேடி மீட்டதாக கண்ணீர்மல்க கூறுகின்றனர். இதனால், விரைவு ரயில்களில் பாதுகாப்பு குறைப்பாடா என்ற கேள்வி எழுகிறது.

News May 3, 2024

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிடாதீர்கள்

image

மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருந்தால், அவற்றை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுவாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளில் தான், இதுபோல் சிவப்பு கோடுகள் இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்பட்ட போதெல்லாம், நீங்களாகவே இந்த மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 3, 2024

காங்கிரஸ் கோட்டை ரேபரேலி

image

காங்கிரசின் கோட்டையாக விளங்கும் ரேபரேலி தொகுதியில், பெரோஸ் காந்தி 1952ஆம் ஆண்டு முதல் 2 முறை எம்பியாக இருந்தார். 1967ஆம் ஆண்டு இந்திரா காந்தி முதன்முதலில் போட்டியிட்டார். தொடர்ந்து 2 தேர்தல்களில் வென்ற அவர், எமெர்ஜென்சிக்கு பிறகு நடந்த தேர்தலில் அங்கு தோற்றார். 2004இல் இருந்து தொடர்ந்து 4 முறை இத்தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது ராகுல் காந்தி களம் இறங்கியுள்ளார்.

News May 3, 2024

BREAKING: தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி

image

நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல்.ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது சொந்த தொகுதியை விட்டுவிட்டு, தனது தாய் சோனியா காந்தி வெற்றிவாகை சூடிய ரேபரேலியில் களமிறங்குகிறார்.

News May 3, 2024

துன்பத்தை நீக்கும் திருச்செந்தூர் முருகன்

image

உலகளவில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், முருகனின் 2ஆம் படை வீடாக இருக்கிறது. கடலோரத்தில் ரம்மியமாக அமைந்துள்ள இந்த கோயிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர், சூரபத்மனை அழித்த ஜெயந்தன் என்பதால் ‘ஜயந்திபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் பெற, வேலை வாய்ப்பு கிடைக்க, தோஷங்கள் நீங்கி கஷ்டங்கள் தீர திருச்செந்தூர் முருகனை மனமுருகி வழிபடலாம்.

News May 3, 2024

+2 தேர்வு முடிவுக்கு முன்பே நீட் தேர்வு

image

நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கு முன்பே நீட் தேர்வு நடப்பதால், மாணவர்களின் சங்கடங்கள் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே நீட் தேர்வு நடக்க இருந்ததால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், நடப்பாண்டில் மே 5இல் நீட் தேர்வும், 6இல் +2 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.

error: Content is protected !!