News May 3, 2024
துன்பத்தை நீக்கும் திருச்செந்தூர் முருகன்

உலகளவில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், முருகனின் 2ஆம் படை வீடாக இருக்கிறது. கடலோரத்தில் ரம்மியமாக அமைந்துள்ள இந்த கோயிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர், சூரபத்மனை அழித்த ஜெயந்தன் என்பதால் ‘ஜயந்திபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் பெற, வேலை வாய்ப்பு கிடைக்க, தோஷங்கள் நீங்கி கஷ்டங்கள் தீர திருச்செந்தூர் முருகனை மனமுருகி வழிபடலாம்.
Similar News
News November 8, 2025
இந்தியாவில் அணு ஆயுத சோதனையா? ராஜ்நாத் பதில்

USA, ரஷ்யா, சீனா, வடகொரியா, பாக்., என பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனையில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து பதிலளித்த ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத சோதனை விவகாரங்களில், இந்தியா மற்ற நாடுகளின் கட்டளைக்கோ அல்லது அழுத்தத்தின் காரணமாகவோ முடிவு எடுக்காது என்று தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
News November 8, 2025
அதிமுகவில் இருந்து கூண்டோடு விலக முடிவு!

செங்கோட்டையனின் <<18222737>>ஆதரவாளர்களான Ex MP சத்யபாமா<<>> உள்ளிட்டோரை நேற்று கட்சியிலிருந்து EPS நீக்கினார். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். இது குறித்து அதிமுக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், செங்கோட்டையனின் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஈரோட்டில் இன்று ‘Mass Resignation’ என்ற பெயரில் பலரும் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News November 8, 2025
போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையிடவில்லை: ராஜ்நாத் சிங்

தானே இந்தியா-பாக்., போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், போர் நிறுத்தம் இந்தியா – பாக்., இடையில் மட்டுமே இருந்ததாகவும், எந்த 3-ம் தரப்பினரும் மத்தியஸ்தத்தில் ஈடுபடவில்லை எனவும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாக்.,-யிடம் இருந்து போரை நிறுத்த தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் தான், சண்டை நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


