News May 3, 2024

வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அமிதாப்

image

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வேட்டையன்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அங்கு, அமிதாப் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி & அமிதாப் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News May 3, 2024

நிலவை அடைவதற்கான பாகிஸ்தானின் முதல் வெற்றி

image

நிலவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தனது முதல் பயணத்தை பாகிஸ்தான் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஒத்துழைப்புடன் ICUBE-Q என்ற செயற்கைக்கோளை சீனாவின் ஹைனானில் உள்ள ஏவுதளம் மூலம் நிலவிற்கு பாகிஸ்தான் செலுத்தியுள்ளது. இது நிலவில் தரையிறங்காமல், 3-6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை ஆய்வு செய்ய உள்ளது. இன்னும் 5 நாள்களில், இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடையும்.

News May 3, 2024

மருத்துவமனையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி

image

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், நடிகையுமான அங்கிதா லோகண்டே கையில் கட்டுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது காதல் கணவர் விக்கி ஜெயினும் உடன் இருக்கிறார். இதைப் பார்த்து கொந்தளித்துப் போன நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். மருத்துவமனையில் ஓய்வு எடுக்கும்போது கூட காதலனுடன் ரொமான்ஸ் தேவையா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News May 3, 2024

IND-PAK டி20 போட்டி: ஹோட்டல் அறைகளின் வாடகை உயர்வு

image

டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண ரசிகர்கள் போட்டி போடுவதால், ஹோட்டல் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில், மே மாதம் 9ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, ஹோட்டல் அறைகளின் வாடகை 600% சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அகமதாபாத்தில் இரு அணிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை காண வந்த ரசிகர்கள், ஹேட்டலில் இடம் இல்லாததால் மருத்துவமனைகளை புக் செய்தனர்.

News May 3, 2024

பள்ளிகளில் சினிமா திரையிட பரிசீலிக்க உத்தரவு

image

பள்ளிகளில் கல்வி குறித்த சினிமாவை திரையிட வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளி, கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கல்வி குறித்த சினிமாவை திரையிட உத்தரவிட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சினிமாவை திரையிடுவது குறித்த கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது.

News May 3, 2024

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்துக்குள் முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக மேற்கொள்ளலாம், அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய ரூ.25 வசூலிக்கப்படும், ஆஃப் லைனில் திருத்தம் செய்ய ரூ.50 வசூலிக்கப்படுமென்று ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

News May 3, 2024

இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா

image

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சற்றுமுன் ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் இடத்தில் இருந்த இந்தியா, ஒரு இடம் பின்தங்கி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

News May 3, 2024

ராகுல் காந்திக்கு பாகிஸ்தானில் ஆதரவு

image

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டிருந்தால் அவர் நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தானில் ராகுலுக்கு அதிக ஆதரவு இருப்பதால் அவரை அங்கு தோற்கடிக்க முடியாது எனவும், பாகிஸ்தான் விரும்புவது இந்தியாவில் கண்டிப்பாக நடக்காது என்பதால், ராகுல் இங்கு வெற்றிபெற மாட்டார் என விமர்சித்துள்ளார்.

News May 3, 2024

நாளை இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

image

வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

டி20 உலகக் கோப்பையில் கோலி ஓப்பனிங் இறங்க வேண்டும்

image

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற அவர், ரோஹித் ஷர்மா 3ஆவது வரிசையில் விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!