India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்றுகூட உள்ளதால், நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை காங்கிரஸ் கட்சி மத ரீதியாக பிளவுபடுத்தி இருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரசாரத்தின் போது பேசிய அவர், இம்முறை NDA கூட்டணி 400 இடங்களை பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும், தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 இடங்களை கூட வெல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில், இன்று முதல் மே 28ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிகளவு வெப்ப அலை வீசுவதோடு வெயில் சுட்டெரிக்கும் என்றும், வெயில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மதிய வேளைகளில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் அதிகளவு சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன், ஆனால் அதில் இருந்து மீண்டு வந்தேன் என்றும், பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும், அவர்களை எந்தவித போதை பழக்கத்திற்கும் அடிமையாக விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
▶மே – 4, சித்திரை – 21 ▶கிழமை – சனி
▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 9:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM
▶குளிகை நேரம்: 6:00 AM – 7:30 AM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶திதி: ஏகாதசி
▶நட்சத்திரம்: 10:07 PM வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா வீரர் சுனில் நரைன் புதிய மைல் கல்லை எட்டினார். நேற்றைய போட்டியில், ரோஹித் ஷர்மா, நெஹல் வதேரா விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை (25 விக்கெட்டுகள்) வீழ்த்திய 5ஆவது வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை (178 விக்கெட்டுகள்) வீழ்த்திய 5ஆவது வீரர் என்ற இரு பெரும் சாதனைகளை படைத்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதமர் மோடி வெளிப்படையாக ஊழல் செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிரசாரத்தின் போது பேசிய அவர், பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்த உடனே, நிறுவனங்களுக்கு ₹1,000 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்றும், சிபிஐ வழக்கை விசாரிக்கத் தொடங்கியதும், அதனை மூடுவதற்கு நிறுவனங்கள் பாஜகவிற்கு ₹1000 கோடி கொடுக்கின்றன என்றும் அவர் கூறினார்.
சுற்றுலா மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சிலர், ஊட்டிக்கு மினி வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். வேன், பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 31 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
✍உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். ✍நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. ✍உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. ✍பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது. ✍உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ✍தன்னலம் இல்லாமல், அன்புடன் பழகுபவர்களே உலகத்திற்குத் தேவை. ✍அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
கலையரசன் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் இணைந்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘ஜோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ரியோ-மாளவிகா இணைந்துள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.