News May 4, 2024
விவேகானந்தர் பொன்மொழிகள்

✍உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம். ✍நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. ✍உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. ✍பொய் வாழ விடாது, உண்மை சாக விடாது. ✍உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ✍தன்னலம் இல்லாமல், அன்புடன் பழகுபவர்களே உலகத்திற்குத் தேவை. ✍அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
Similar News
News November 7, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளரான திருப்பூர் Ex MP சத்யபாமா உள்ளிட்ட 12 முக்கிய நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியுள்ளார். Ex MP சத்யபாமா, கடந்த 30-ம் தேதி செங்கோட்டையனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யபாமாவை ஏற்கெனவே மாவட்ட மகளிர் அணி பொறுப்பிலிருந்து EPS நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 7, 2025
இது என்னடா சீன அதிபருக்கு வந்த புது சோதனை!

தென் கொரியாவில் டிரம்பை சந்தித்தபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் சிரித்து பேசும் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோ சீனாவில் வெளியாகாதாம். ஏனென்றால், போட்டோஸ் மற்றும் தகவல்களை பகிர்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருப்பதால் அங்கு இது வெளியாகாது. ஆனால், சீன அதிபரின் இந்த மறுபக்கத்தை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
News November 7, 2025
மாதவிடாயின் போது குமட்டல் வருதா? இதோ தீர்வு

மாதவிடாய்க்கு முன் குமட்டல் உணர்வு ஏற்படுகிறதா? ஒரு பொருளை வைத்தே இதனை ஈஸியாக சரி செய்யலாம். காலையில் இஞ்சி டீ குடிப்பது இதற்கு சரியான தீர்வாக அமையும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியே நடைபயிற்சி சென்று நல்ல காற்றை சுவாசிப்பதும் கூட குமட்டலை சமாளிக்க உதவியாக இருக்கும் என்கின்றனர். அனைத்து பெண்களுக்கும் SHARE THIS.


