India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டு மக்களிடமிருந்து உண்மையை எவ்வளவு காலம் பிரதமர் மோடியால் மறைக்க முடியும் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மொரேனாவில் நடந்த பிரசாரத்தில் பேசிய அவர், பாஜகவினரின் பிரசாரம் உண்மையல்ல என்பதை மக்கள் அறிவர். பணவீக்கம், ஊழல், நிதி நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை இவைதான் பாஜக அரசின் 10 ஆண்டுகால சாதனை. இம்முறை பாஜகவின் கனவு பலிக்காது. ‘சத்யமேவ ஜெயதே’ உண்மையே வெல்லும்” எனக் கூறினார்.
காப்புரிமை விவகாரத்தில் வைரமுத்துவுக்கு சீனு ராமசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வைரமுத்து மீதான கோபத்தில் இளையராஜா யாரையும் கவித்துவமாக எழுத விடாமல், 20 வருடமாக தான் இசையமைத்த நல்ல டியூன்களுக்கு Dummy வரிகளை ஓகே செய்ததாக சாடியுள்ளார். அப்படி பார்க்கும்போது, உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜாதான் என கங்கை அமரனுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற இருந்த நாதக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதி மறுத்த போதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் பலர் தடுப்பு காவலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்று தேதியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலியிடம் தன்னுடைய பேட்டிங் ஸ்டேன்ஸ் & டெக்னிக்கல் சம்பந்தமான ஆலோசனைகளைக் கேட்டதாக KKR வீரர் வெங்கடேஷ் ஐயர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். MI அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆட்டநாயகன் விருதை பெற்ற பின் பேசிய அவர், நான் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன். தொழில்முறை கிரிக்கெட்டராக ஆட்டத்தை எப்படி வேகப்படுத்த வேண்டுமென அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்” எனக் கூறினார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 நாள்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக ஏற்கெனவே ஜெயக்குமார் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது காணவில்லை. இதனால் அவருக்கு என்ன ஆனது, எங்கே இருக்கிறார் என்ற கேள்விகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படமொன்று வைரலாகி வருகிறது. அதில், 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் அப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், ₹10 ஆயிரம் சம்பளம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பலரும் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இந்த அறிவிப்பு போலியானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. வெங்கடேஷ் ஐயர் (70 ரன்கள்) மற்றும் மிட்செல் ஸ்டார்க்கின் (33/4 விக்கெட்டுகள்) அபாரமான ஆட்டத்தால், 12 வருடங்களுக்கு பிறகு மும்பை அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணி. 2012ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தியது.
தமிழகத்தில் வெப்ப அலைக்கான அலர்ட் மூன்று நாள்களுக்கும், வெப்பச்சலன மழைக்கான அலர்ட் 5 நாள்களுக்கும் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், கடும் வெப்ப அலை குறையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஹன்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த பள்ளத்தாக்கில் உருண்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. உ.பி அலிகாரில் மல்யுத்த வீரர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 1954இல் இதே நாளில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் 1 நிமிடம் 34 வினாடிகளில் பிரபல மல்யுத்த வீரர் பாபா பஹல்வானை தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
Sorry, no posts matched your criteria.