India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் இன்று RR-GT அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் மைதானத்தில், டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற RR, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 5 போட்டிகளில் விளையாடி 2இல் மட்டுமே வென்ற GT, புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் யார் வெல்லுவாங்கன்னு சொல்லுங்க?
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான், அவரது ஆதரவாளர்கள், சந்தேஷ்காலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களை வன்கொடுமை செய்ததாகவும், அவர்களது நிலங்களை அபகரித்ததாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் தங்கி பணிபுரிவோருக்கு ஏற்ற டிஜிட்டல் நாடோடி விசாவை (Digital Nomad Visa) பல நாடுகள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் வழங்குகின்றன. இந்தியர்களுக்கு ஓராண்டு வரை தங்கி பணிபுரிய இந்தோனேசியா (150 டாலர்), மொரிஷியஸ் (கட்டணமில்லை), போர்ச்சுக்கல் (90 யூரோ), ஜெர்மனி(75 யூரோ), கிரீஸ் (75 யூரோ), பஹாமாஸ் (25 டாலர்), ஸ்பெயின் (73.26 யூரோ), செஷல்ஸ் (10 யூரோ) கட்டணத்தில் இந்த விசாவை வழங்குகின்றன.
இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்க்க காங்கிரஸும், திமுகவுமே காரணமென வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “கச்சத்தீவில் யாராவது வாழ்ந்தார்களா என கேட்க விரும்புகிறேன்” என கூறியிருந்தார். இந்தப் பேச்சு, தேசம் முக்கியமில்லையென்ற காங்கிரஸின் மனநிலையை வெளிப்படுத்துவதாக பாஜக விமர்சித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் இன்று RR-GT அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கு மழைப் பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்ற RR, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 5 போட்டிகளில் ஆடி 2இல் மட்டுமே வென்ற GT, புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் யார் வெல்லுவாங்கன்னு சொல்லுங்க?
ஊழலை எதிர்த்த ஆம் ஆத்மி தற்போது ஊழல் புகாரில் சிக்கித் தவிப்பதாக ராஜ்குமார் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி அமைச்சர் பதவி, ஆம் ஆத்மி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் இன்று விலகினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் மாறினால் நாடு மாறும் என கெஜ்ரிவால் பேசினார். ஆனால், அரசியல் மாறவில்லை. அரசியல்வாதி மாறிவிட்டதால் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வருவதாக தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ANI நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முன்னர் நீட்டை எதிர்ப்பதாக கூறியவர்,இப்போது நீட் தேர்வை ஆதரிக்கிறார். முன்னர் இந்தி தெரியாது என்றவர், தற்போது இந்தியில் சரளமாக பேசுகிறார். பச்சோந்தியை போல நிறத்தை மாற்றும் அண்ணாமலை, காமெடியன் போல நடந்துகொள்கிறார். இதையே தொடருங்கள்” என்றார்.
தங்களுக்கு ஒதுக்கியது போலல்லாமல் வேறு மாதிரியான மைக் சின்னத்தை வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டுவதாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்விட்ச் இல்லாத மைக் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும், ஸ்விட்ச் உள்ள மைக்கினை வாக்கு இயந்திரங்களில் ஒட்டுவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நிலவும் மோதல் காரணமாக 50,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாம்களுக்கு இடம்பெயர்ந்த கர்ப்பிணிகளில் 200 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. கடுமையான சூழலை எதிர்கொண்ட அந்தப் பெண்கள், குழந்தையின் முகத்தை கண்டு பெருமூச்சு விடுவதாக நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும், விரைவில் சூழல் மாறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர் பெண் எழுத்தாளரான முத்தம்மாள் பழனிசாமி, 1933இல் மலேசியாவில் பிறந்தவர். கோவையை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம் மலேசியாவுக்கு கூலி வேலை செய்ய இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகள் மலேசியாவில் ஆசிரியராக பணிபுரிந்த அவர், 1950ஆம் ஆண்டு ‘ஷோர் டு ஷோர்’ என்ற பெயரில் தன்வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பின் நாளில் அதனை தமிழில் ‘நாடு விட்டு நாடு’ என்ற பெயரில் மொழிப்பெயர்த்தார்.
Sorry, no posts matched your criteria.