News May 14, 2024

எச்.ராஜா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

image

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த 2018இல் சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடவில்லை எனக்கூறிய எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

News May 14, 2024

இடமாறுதல் விண்ணப்பங்களை உடனே சரிபார்க்க உத்தரவு

image

பொது இடமாறுதலுக்காக ஆசிரியர்களால் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடக்க உள்ளது. இதற்கு, மே 17க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு, விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.

News May 14, 2024

இந்த விலங்குகள் மூலமும் ரேபிஸ் பரவும்

image

ரேபிஸ் என்பது மரணத்தை தரக்கூடிய கொடிய வைரஸ் ஆகும். இது மனிதன் உட்பட பாலூட்டிகளை மட்டுமே தாக்கக்கூடியது. அதுவும் WHOவின் தகவல்படி, இந்தியாவில் ரேபிஸால் ஏற்படும் இறப்பு அதிகமாக உள்ளது. அந்தவகையில், நாய் மட்டுமல்ல, பூனை, குரங்கு, முயல், அணில் மற்றும் குதிரை ஆகிய விலங்குகளும் ரேபிஸை கடத்தக்கூடும். அதனால், இந்த விலங்குகளிடமும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும்.

News May 14, 2024

இளையராஜாவுக்கு சினிமாவில் இன்று 48 வயது

image

இந்திய திரைப்பட இசைத்துறையில் “ராஜா”வாக திகழ்பவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவர் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் மே 14 1976இல் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் வெளியானபோது ராஜா என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருந்ததால் பஞ்சு அருணாச்சலம், இளையராஜா என்ற பெயரை இசைஞானிக்கு சூட்டினார். அந்தவகையில் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு வந்து இன்று 48 ஆண்டுகள் ஆகிறது.

News May 14, 2024

ராகுலை இந்திய அரசியலின் ஹீரோ என்றாரா அத்வானி?

image

ராகுல் காந்தியை பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இந்திய அரசியலின் ஹீரோ என புகழ்ந்ததாக செய்தி வைரலாகி வருகிறது. அது உண்மையா என்று Fact Check செய்தபோது, “அவாத் பூமி” பத்திரிகை செய்தி எனத் தெரிந்தது. இதையடுத்து, அதன் இணையதளத்தில் பார்த்தபோது, அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், அத்வானி ராகுலை அவ்வாறு சொல்லவில்லை, செய்தியை நீக்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

News May 14, 2024

வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது

image

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/LPGக்கு மாற்றும்போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என அரசு கூறியுள்ளது. வாகன உரிமையாளர் இவ்வகை செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 14, 2024

மதுரை எய்ம்ஸ்: சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஒப்புதல்

image

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மாநில அரசின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு இதுவரை கட்டுமானப் பணி தொடங்கப்படாமல் தாமதமாகி வருகிறது. விரைவில் பணி தொடங்குமென மத்திய அரசு உறுதியளித்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News May 14, 2024

ஏக்நாத் ஷிண்டேவுக்கு சித்தராமையா பதிலடி

image

கர்நாடக காங்கிரஸ் அரசு தேர்தலுக்கு பிறகு கவிழ்ந்து விடும் என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சித்தராமையா, ஏக்நாத் ஷிண்டே அரசு பதவியில் நீடிக்குமா எனத் தெரியவில்லை என்பதால் அவரை தனது அரசை காப்பாற்றும்படி முதலில் சொல்லுங்கள் என்று பதிலடி கொடுத்தார்.

News May 14, 2024

அவதூறு வழக்கில் பாஜக வேட்பாளருக்கு கோர்ட் உத்தரவு

image

அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ஆம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் எதுவும் பயன்படுத்தவில்லை என தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வழக்கில் இன்று இபிஎஸ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று சூறாவளி

image

தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அங்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40- 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!