News May 14, 2024
அவதூறு வழக்கில் பாஜக வேட்பாளருக்கு கோர்ட் உத்தரவு

அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ஆம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் எதுவும் பயன்படுத்தவில்லை என தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வழக்கில் இன்று இபிஎஸ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?
News December 15, 2025
இன்சூரன்ஸால் இந்தியாவில் விளையாடாத மெஸ்ஸி!

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, எந்த கால்பந்து போட்டியிலும் விளையாடாததற்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசிதான் காரணம். மெஸ்ஸி தனது இடது காலை சுமார் ₹8,000 கோடிக்கு இன்சூர் செய்துள்ளார். அர்ஜெண்டினா அல்லது இன்டர் மியாமி அணிகளுக்காக விளையாடும் போது காயமடைந்தால் மட்டுமே அந்த பாலிசி கவராகும். ஆனால், Exhibitional போட்டிகளில் காயம் அடைந்தால், பாலிசி கவராகாது என்பதால், மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவில்லை என கூறப்படுகிறது.
News December 15, 2025
இந்தியாவுக்கு பஹல்காம்.. ஆஸி.,க்கு போண்டி

சந்தோஷத்தை தந்த சுற்றுலா தலங்களான இந்தியாவின் <<16186680>>பஹல்காமும்<<>>, ஆஸி.,-யின் சிட்னி <<18568504>>போண்டி கடற்கரையும்<<>> பயங்கரவாதத்தின் கொடூரத்தால் துயரத்தின் தடங்களாக மாறியுள்ளன. இரு இடங்களிலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டே தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பஹல்காமில் 26 உயிர்களும், சிட்னியில் 15 உயிர்களும் பறிபோன நிலையில், இரண்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான பொதுமக்களே. So sad!


